உன் காதல்

எப்படி சரியாக என்
மௌனங்களை மொழிபெயர்க்கிறாய்
ஒற்றை வார்த்தைக்கு விரிவுரை அளிக்கிறாய்
விழி அசைவிற்கும் விளக்கம் தருகிறாய்
உன்னால் மட்டும் எப்படி முடிகிறதென்று
புரிந்து கொண்டேன்
வார்த்தைகள் , மௌனங்கள்
கவிதைகள் ,காவியங்கள்
இலக்கணம், இலக்கியம்
மொழி, சங்கேதம்
இப்படி சகலதிற்கும்
அப்பாற்பட்டது
என் மீதான உன் காதல்