கனா காணும் காலங்கள்

இரண்டரை வருடங்கள்
உருண்டோடி போகையில்
வெருண்டோடும் வாழ்க்கையில்
மருண்டாத ஞாபகங்கள்

கல்லூரியோரம் வீசிய காற்று
சுகமாய் இருந்தது நேற்று
அன்று பள்ளியில் தாளங்கள் போட்டு
பாடினோம் சுவையான பாட்டு
ஏங்குது உள்ளம் அதை மீண்டும் கேட்டு

அவை கனா காணும் காலங்கள்
வாழ்வின் அழகான கோலங்கள்
களித்தோம் அறியாது வாழ்வின் ஆழங்கள்
பிரியும் போது ஏனின்று சகிக்காத ஓலங்கள்

பள்ளியின் சுவடுகள்
நல்லதை சொல்லிட
நண்பனின் கவலையோ
பிரிவினை சகித்திட

மறவாது இக்காலம்
வாழ்வினில் எந்நாளும்
மறையாது நம் நட்பு - இன்று
கண்ணீரில் கரைந்தாலும்....

எழுதியவர் : அப்துல்லாஹ் deen (27-Feb-14, 1:37 pm)
பார்வை : 1766

மேலே