அப்துல்லாஹ் deen - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல்லாஹ் deen |
இடம் | : Badulla |
பிறந்த தேதி | : 12-Mar-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Feb-2014 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 19 |
நான் ஒரு கவிதைப்பிரியன் . கவி எழுத வேண்டும் என்ற ஆர்வத்திலும் கவி எழுத முடியும் என்ற தன்னம்பிக்கையிலும் எழுதுகிறேன் . முடிவு உங்கள் கைகளில் .......
நினைவில் வந்தாய்
நித்திரையை இழந்தேன்.
உயிரில் கலந்தாய்
உணா்வை இழந்தேன்.
சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.
தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.
நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!
தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!
பொன் மாலைப் பொழுதிலே
உன் சாரல் அடிக்குதே
பூங்காற்றும் தென்றலும்
உன் மொழி பேசுதே
நீ எந்தன் அருகில் இருந்தால்
உயிர் உறைந்து போகும் நொடிக்குள்
நீ எந்தன் உறவும் ஆனால்
மனம் இறக்கை கட்டி பறக்கும்.
உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....
உன்னை காணவில்லை இன்று
என்ன ஆனதோ என்று
மனம் பதறிப் போகுதே நின்று
பெண்ணே வந்து
தரிசனம் தந்து
மனதில் மகிழ்ச்சி தா கொண்டு. ...
உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....
உன்னைக்கண்டேன்
ஆயிரத்தில் ஒருத்தியாய் எனக்கு தெறிந்தாய்
உன் அழகா அடக்கமா
எது என்னை சாய்த்தது என்று
புரியவில்லை
நான் இன்னும் மயக்கத்தில் ....
காதல்.....
அது உன்னை புண்படுத்தக்கூடும்....,
ஆனால்....,
அது உன்னால் புண்பட்டு விடாமல் பார்த்துக்கொள்....
நிகழப்போவது அறிந்தோ என்னவோ இறைவன் சமீரின் தாய்க்கு ஆசான் தொழிலை கைவசம் கொடுத்திருந்தான். திடீர் அதிர்ச்சியில் இருக்கும் சமீரின் தாய்க்கு இழப்பின் துயரம் இதயத்தை புன் படுத்த தனியாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்ற எண்ணம் உப்பு நீராய் இதயத்தில் பாய்ந்தது. கரடுமுரடான வாழ்க்கை பாதையில் கதியின்றி நின்ற அவன் தம்பிக்கும் தங்கைக்கும் தாய்க்கும் அவன் அம்மம்மா மலர்விரிப்பானார், அவன் சித்தப்பா மார் ஒளிவிளக்கானார்கள். உலகின்ட்ட ஓட்டத்தோடும் வாழ்வின் வாட்டத்தோடும் பிரிவின் வலிகள் இதைய மயானத்தில் புதைய அவர்களின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கின்றது.
அறிவுரை பலர் சொல்ல கேட்டிருப்போம்
ஏன் நாம் கூட நிறைய பேருக்கு அறிவுரை சொல்லியிருப்போம்
ஆனால் எத்தனை பேர் நம் அறிவுரை கேட்டு மாறியிருப்பார்கள் நம்மில் எத்தனை பேர் பிறரின் அறிவுரை கேட்டு அதை கடைபிடுத்திருப்போம் உண்மையிலே அனுபவம் மட்டுமே ஒருவரை மாற்றுமே தவிர அறிவுரையாக இருந்திருக்காது என்பது என் கருத்து உங்கள் கருத்தென்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன் எதுவாக இருந்தாலும் பதியுங்கள் என் கருத்தை ஆமோதிப்பவர்களும்
கருத்து பதியலாம்
இரண்டரை வருடங்கள்
உருண்டோடி போகையில்
வெருண்டோடும் வாழ்க்கையில்
மருண்டாத ஞாபகங்கள்
கல்லூரியோரம் வீசிய காற்று
சுகமாய் இருந்தது நேற்று
அன்று பள்ளியில் தாளங்கள் போட்டு
பாடினோம் சுவையான பாட்டு
ஏங்குது உள்ளம் அதை மீண்டும் கேட்டு
அவை கனா காணும் காலங்கள்
வாழ்வின் அழகான கோலங்கள்
களித்தோம் அறியாது வாழ்வின் ஆழங்கள்
பிரியும் போது ஏனின்று சகிக்காத ஓலங்கள்
பள்ளியின் சுவடுகள்
நல்லதை சொல்லிட
நண்பனின் கவலையோ
பிரிவினை சகித்திட
மறவாது இக்காலம்
வாழ்வினில் எந்நாளும்
மறையாது நம் நட்பு - இன்று
கண்ணீரில் கரைந்தாலும்....