திசை மாறிய பயணங்கள் 002
நிகழப்போவது அறிந்தோ என்னவோ இறைவன் சமீரின் தாய்க்கு ஆசான் தொழிலை கைவசம் கொடுத்திருந்தான். திடீர் அதிர்ச்சியில் இருக்கும் சமீரின் தாய்க்கு இழப்பின் துயரம் இதயத்தை புன் படுத்த தனியாக குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்ற எண்ணம் உப்பு நீராய் இதயத்தில் பாய்ந்தது. கரடுமுரடான வாழ்க்கை பாதையில் கதியின்றி நின்ற அவன் தம்பிக்கும் தங்கைக்கும் தாய்க்கும் அவன் அம்மம்மா மலர்விரிப்பானார், அவன் சித்தப்பா மார் ஒளிவிளக்கானார்கள். உலகின்ட்ட ஓட்டத்தோடும் வாழ்வின் வாட்டத்தோடும் பிரிவின் வலிகள் இதைய மயானத்தில் புதைய அவர்களின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கின்றது.