தீப்பெட்டி ராட்சசி பாகம் 3
அங்கேயே நில் என்றே சைகையை மட்டும் கைகளால் மீண்டும் மீண்டும் காட்டினாள். சற்று துரம் சென்றதும் அவன் கண்களிலிருந்து ஓடி மறைந்தாள்.
மணி விடியற்காலை 3.47 இப்படிதான் அவளது கைத்தொலைப்பேசி காண்பித்தது. இன்னும் துங்காமல் ஆந்தைப் போல் விழித்துக் கொண்டிருந்தாள். துக்கம் கண்களை சொருக மறுத்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் அதற்கான காரணத்தை தான் அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.
ஆம், அதன் காரணம் தீஜே தான். அவனை முதன் முதலில் அவள் பார்த்தது ஸ்டார்பாக்ஸில் அல்ல என்பதனை அவள் நன்றாக உறுதி செய்திக் கொண்டாள். அவளுக்கு நல்ல ஞாபக சக்தி என்பது இன்றுதான் மணி விடியற்காலை 3.47 இப்படிதான் அவளது கைத்தொலைப்பேசி காண்பித்தது.
இன்னும் துங்காமல் ஆந்தைப் போல் விழித்துக் கொண்டிருந்தாள். துக்கம் கண்களை சொருக மறுத்ததை அவளால் ஏற்றுக் கொள்ள முடிந்தாலும் அதற்கான காரணத்தை தான் அவளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஆம், அதன் காரணம் தீஜே தான். அவனை முதன் முதலில் அவள் பார்த்தது ஸ்டார்பாக்ஸில் அல்ல என்பதனை அவள் நன்றாக உறுதி செய்திக் கொண்டாள். அவளுக்கு நல்ல ஞாபக சக்தி என்பது இன்றுதான் அவளுக்கு தெரிந்தது.
அவனை அவள் முதன் முதலில் அவசர மின் ரயில் வண்டியில் தான் பார்த்தாள். ஒரு வெள்ளை நிற டி- ஷர்ட், கருநீல ஜீன்ஸ், கழுத்தில் வெளிர் பச்சை நிறத்திலான சால்வை. தலை சிவலோ இக்கால இளைஞர்களைப் போல் பின்பக்கம் நேராய் தூக்கி நிறுத்தி வைத்து,முன்பக்கம் கொஞ்சமாய் சில முடிகளை இடது பக்கம் சீவி விட்டிருந்தான்.பார்க்க மிகவும் மாடர்ன் கலாச்சாரத்தில் முழ்கிப் போயிருப்பவன் என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது. அப்போதே தீஜே இவளை வைத்தக் கண் வாங்காமல் பார்த்ததை அவளால் இப்பொதுக் கூட நினைத்துப் பார்க்க முடிந்தது.
அன்றுக் கூட இவள் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருந்தாள். நவீன்ஷனுடன் சண்டை. அதே மின் ரயில் முன் சண்டை போட்டு அவளை கண் கலங்க வைத்தான் நவீன்ஷன். அவளை சர மாறியாக ஏசினான். அவள் மனம் நொந்து அவன் பேசி கொண்டிருக்கும் போதே அந்த மின்னியல் ரயிலில் ஏறினாள். தீஜேவை பார்க்கும் வண்ணமாய் அவனுக்கு எதிரே நின்றிருந்தாள்.
அவள் அழ வேண்டும் என்று எண்ணவில்லை. இருந்தப் போதும், சில நிமிடங்களுக்கு முன்னாள் நவீன்ஷன் அவளை திட்டிய வார்த்தைகள் அவள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. அதன் பிரதிப் பலனாய் வழிந்தது அவள் கண்களிலிருந்து கண்ணீர்.
கண்களில் அவளை அறியாமல் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டுக் கொண்டிருந்தாள். தீஜே அவளை பார்த்துக் கொண்டி இருக்கிறான் என்பது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. ஏற்கனவே மன வலி இதில் இவன் வேறு ஏன் தான் இப்படி பார்கிறானோ என்று மனதுக்குலேயே அவனை கருவிக் கொண்டாள். அடுத்த சில நிமிடங்களில் இவள் இறங்க வேண்டிய இடம் வந்தது.
இவளும் அந்த மினியால் ரயில் வண்டியிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தாள். மின்னியல் ரயில் வண்டியும் அங்கிருந்து நகர்ந்தது. தீஜே மின்னியல் ரயில் வண்டியின் உள்ளே நின்றப்படி அவளைப் பார்ப்பதை இவள் வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ரயில் நகர அவனும் அவள் கண்கலிளிரிந்து மறைந்தான்.
அவனை சம்பந்தப்பட்ட நிகழ்வை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள். மெத்தையில் படுத்துக் கொண்டு அவனையும் அவனது வெளிர் பச்சை சால்வையையும் நினைத்துப் பார்த்தாள். அழகாகத்தான் இருக்கிறான். என்னப் பெயர் .... ஆ.... தீஜே.. அதற்கும் ஒரு முழு நீள விளக்கமொன்று கொடுத்தானே... ஆ... தீஜே தேஜஸ்வின். பெயர் கூட வித்தியாசமாக இருக்கிறதே அவனைப் போலவே.
மீண்டும் மீண்டும் அவனை பற்றிய நி
னைப்புகள் அவளது சிந்தையில் உலா வந்தது. இறுதியில் களைத்துப் போய் தூங்கியும் போனாள்.
அதிகாலை வான் இருட்டிய நிலையில் துவான தூரல்கள் லேசாக மேனியை நனைத்த வண்ணம் இருந்தது. பரபரப்பு நகரமான கோலாலும்பூர் இன்று கொஞ்சம் சோர்ந்திருந்தது. சோம்பல் முறித்து உற்சாகம் கூட்டும் வண்ணம் கலை வான் அனைவரையும் சுறுசுறுப்பின் சின்னமாய் உருமாற்றும் தருவாயில் இந்த கருவானதிற்கு என்னதான் அப்படியோரே பொறாமையோ தெரியவில்லை.
உடனே போட்டி போட்டுகொண்டு அனைவரையும் சோம்பலாகி வீட்டிலேயே முடங்க வைத்து அப்படியே முண்டியடித்துக் கொண்டு வெளியே போவோரையும் ஆமையாய் நகர வைத்து நகரத்தையே கொஞ்ச நேரத்தில் தன் வசப்படுத்தி அன்றைய காலைப் பொழுதை மட்டுமின்றி அன்றைய நாளையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பெருமிதத்தோடு கம்பீரமாய் நடை போடும் இந்த மழைக்கு இன்று இவளும் பலியாடாகிப் போனாள் என்றுத் தான் சொல்ல வேண்டும்.
பத்திக்கும் தீப்பெட்டி !