தீப்பெட்டி ராட்சசி பாகம் 2

இந்த காதல் பூங்காவில் இவளது ஒவ்வொரு செய்கையையும் நாள் தவாராமல் பார்த்துக் கொண்டே இருந்தான் புதியவன் ஒருவன்.
அன்றைக்கும் அப்படிதான், தனது வழக்கமான தனிமை சிறையில் நன்றாக கண்ணீர் வடித்து விட்டு அருகிலிருந்த 'ஸ்டார்பாக்ஸில்' நோக்கி நடந்தாள். அந்தப் புதியவனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

'ஸ்டார்பாக்ஸின்' உள்ளே நுழைந்தவள் 'கோல் சாக்லேட்' ஒன்றை ஆர்டர் செய்து அதனைப் பெற்றுக் கொண்டு அந்த கடையின் வெளிப்புறத்தில் இருந்த மேஜைகளை நோட்டமிட்டாள். பின்பு, வெளியே நடந்து சென்று அங்கிருந்த ஒரு மேஜையில் அமர்ந்தாள். அங்கிருந்து கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அதனையும் தாண்டி பரந்து விரிந்து கிடந்த கடலைப் பார்த்தவாறே அவள் கையில் இருந்த 'கோல் சாக்லேட்டை' மெல்லமாய் இரண்டு முடக்குகள் குடித்தாள்.

நவீன்ஷனின் முகம் அவளது கண் முன் தோன்றியது.அதன் பலன் அவளது கன்னனங்கள் கண்ணீரில் நனைந்தது.

அந்தப் புதியவன் இரண்டு மேஜைகள் தள்ளி அமர்ந்து இத்தனையையும் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளது விசும்பல் அவனது காதை இன்னொரு தரம் எட்டுவதற்குள் விருட்டென எழுந்து அவளது மேஜைக்கு சென்று அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

தனது கைகளையே கைக்குட்டையாய் ஆக்கி வேகமாய் அவளது கண்களை துடைத்தாள். ஆனால், அவன் யார் என்ன வேண்டும் என வாய்த் திறந்து கேற்க அவளுக்கு விருப்பமில்லை என்பதை விட தெம்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆதலால், அமைதியாகவே அவனை உற்று நோக்கி கொண்டிருந்தாள். அந்தப் புதியவனோ இதழின் ஊடே மெல்லிய புன்னகையோடு தனது கையிலிருந்த 'ஐ போனை' அவளது முகத்திற்கு நேராய் காண்பித்தான்.

இதுவரை அவனை பார்த்திருந்தவள் அவனது தற்போதைய செய்கை எதை காட்டுகிறது என்று புரியாமல் தனது முகத்திற்கு நேராய் அவன் நீட்டிய 'ஐ போனை' பார்த்தாள். அதில் அழகாய் தெரிந்தது அவளது முகம். ஆனால், சிவந்து வீங்கிப் போயிருந்த அவளது முகத்தை காண அவளுக்கே ஒம்பவில்லை. தனது கன்னங்களில் கை வைத்து தொட்டு பார்த்துக் கொண்டாள்.

கண்களும் சிவந்து பொய் இருப்பதை உணர்ந்தாள். என்ன நினைத்தாலோ விருட்டென எழுந்து 'கோல் சாக்லேட்டோடு' நடையைக் கட்டினாள். பாதி தூரம் வரை நடந்து விட்டவள் சற்று நேரம் அப்படியே அந்த சாலையில் நின்று விட்டாள். சில நொடிகள் கழித்து அவள் அமர்ந்திருந்த இடத்தை திரும்பி பார்த்தாள். அந்தப் புதியவனோ அங்கேதான் அமர்ந்திருந்தான். அவள் செய்வதையெல்லாம் பார்த்துக் கொண்டு.

அவன் தன்னையே பார்க்கிறான் என்றரிந்தவள் அவளது நடையைக் கட்டினாள். சில தூரம் சென்று மீண்டும் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவனைக் காணவில்லை. நின்ற இடத்திலேயே நின்று தலையை மட்டும் அங்கே இங்கே திருப்பி அவனைத் தேடினாள். அவளது கையிலிருந்த 'கோல் சாக்லேட்' கரைய ஆரம்பித்தது. அதன் கப்பிலிருந்து வெளிப்புறத்தில் தண்ணீர் துளிகள் மேலிருந்து கிழ் வழிந்துதோடி அவளது கை விரல்களில் பட்டது.

ஜில்லென்ற நீர் துளிகள் அவளது தேகத்தை சிலிர்க்க வைத்து. கைகள் படபடக்க 'கோல் சாக்லட்டை' நோக்கி திரும்பும் போது சில திசுக்களை கொண்டு அவளது கையேடு அந்த 'கோல் சாக்லட்டையும் சேர்த்து ஒற்றி அவள் எதிரே நின்றிருந்தான் அந்தப் புதியவன்.

அவள் செய்வதறியாது திகைத்து நிற்க அவனோ தீஜே தேஜஸ்வின் பேஸ்புக்லே எட் பிரண்ட் பண்ணிருங்க... நாளைக்கு இதே 'டைம்லே' அந்த குளோரியா ஜீன்ஸ் கேபேவில் மீட் பண்ணலாம்... என கையை வலது பக்கம் காண்பித்தான்.

மத்ததெல்லாம் பேஸ்புக்ல சொல்றேன் என சொல்லி அவ்விடத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பின்வாங்கி கொண்டு ஓடியவாறே சொல்லி விட்டு அவ்விடத்தை விட்டு சிரித்த முகத்தோடு ஓடி அருகிலிருந்த மின்தூக்கியில் ஏறி மறைந்தான்.

நடந்தவாறே சற்று முன் நடந்த அத்தனையையும் அசைப் போட்டால் அவள். அவனது முகம் அவள் கண்களிலேயே நின்றுக் கொண்டிருந்தது. அவனது பெயரை ஞாபகப் படுத்தி பார்த்தாள். தீஜே தேஜஸ்வின் அழகாகன மட்டுமின்றி வித்தியாசமான பெயராகவும் உள்ளதே. தீஜேவின் பெயரையும் அவனது அழகான சிரிப்பையும் என்னிகொண்டிருன்தவள் கண் முன் திடிரென்று நவீன்ஷன் முகம் வந்து நின்றது. ஐயோ... !!

மீண்டும் ஒருமுறை இப்படி ஏமாற நான் தயாராய் இல்லை என மனதுக்குள்ளேயே சொல்லி கொண்ட வரே மின்னியல் ரயில் வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
தீஜே கேட்டுக் கொண்டப்படி மறுநாள் அவள் அங்கு வரவில்லை. அவனை பார்க்கவும் இல்லை. ஆனால், தீஜே விடுவதாய் இல்லை.

அவளைப் பின் தொடர்ந்து அவள் வீடு வரை சென்று அதன் முன் நின்று அவளுக்காக வரி வரியாய் கவிதைகளை அடுக்கினான். முதலில் அங்கிருந்த அக்க பக்கத்தினர் இதனை வாடிக்கையான வேடிக்கையாய் பார்த்தவர்கள் தீஜேவின் 3 நாள் தீராத வேகத்தை பார்த்து அவர்களும் அவனோடு சேர்ந்து அவளது வீட்டின் முன் புறம் நின்று அவனுக்காய் தூது போயினர்.

இதுவெல்லாம் நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. எப்படியோ அவர்கள் அனைவரின் கண்களிலும் மண்ணை தூவி விட்டு மீண்டும் அவளது காதல் பூங்காவிற்கு பயணமானாள்.
அங்கேயும் வந்து நின்றான் தீஜே. அவனிடமிருந்து தப்பித்து ஓட முயன்றவளை வழியே மறைத்து பேச முயன்றான் தீஜே. அவனிடம் சத்தியமாய் மாட்டிடவே கூடாது.

அங்கேயும் வந்து நின்றான் தீஜே. அவனிடமிருந்து தப்பித்து ஓட முயன்றவளை வழியே மறைத்து பேச முயன்றான் தீஜே. அவனிடம் சத்தியமாய் மாட்டிடவே கூடாது என எண்ணி கொண்டு ஓடே முயற்சித்தாள். இருப்பினும், வசமாய் மாட்டிக் கொண்டாள். ஓட முயன்றவளை கை பிடித்து இழுத்து பட்டென உதறினான் தீஜே. பிடித்தவன் ஏன் உதறினான், அதுவும் ஏதோ சுட்டு விட்டது போல அல்லலவா இருந்தது அவனை பாவனை. அவளும் அப்படியே பயந்து நின்று விட்டுதான்,

இதையெல்லாம் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளை பார்த்து குழந்தைப்போல் முக பாவனை செய்தவாறே கைகளை உதறி கொண்டு.... தீப்பட்டி என்றான் அவளைப் பார்த்து. இவளோ கேள்விக் குறியோடு அவனை நோக்கினான்.

நீ தொட்டாலே தேகம் பத்திக்கதடி.... தீப்பெட்டி.... நீதான் தீப்பட்டி என்றான் மறுபடியும் சிரித்தவாறே.
அவன் சொன்னதை கேட்டு வாய் விட்டு சிரிக்க தோன்றியது அவளுக்கு. அதுவும் பல நாட்கள் கழித்து இன்றுதான் சிரிக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இருந்தும் அடக்கிக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாள்.அதேப் போல் உள்ளுர வந்த சிரிப்பை அடக்கியும் கொண்டாள்.

தீப்பெட்டி நீ சரியான ராங்கி பிடிச்சவே.... நான் உன்னை பேஸ்புக்லே என்னை எட் பண்ண சொன்னேன் தானே ? செஞ்சியா ? போன வாரம் குளோரியா ஜீன்ஸ்க்கு வரே சொன்னேன்னே வந்தியா ?

அவள் அமைதியாய் நின்றாள். அவன் கொஞ்சம் நெருங்கி வந்தான். அவள் விருட்டென ஓடத் தொடங்கினாள். அவன் அவளை நோக்கி ஏய் தீப்பெட்டி.... நில்லு தீப்பெட்டி ! என சொல்லிக் கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.

தீஜே தன்னை தொடர்கிறான் என்று அறிந்தவுடன் அவளது ஓட்டம் தானாய் நின்றது. திரும்பி நின்று பின்பக்கமாய் நடந்தாள். தீஜேவும் விடாது அவள் பின்னோக்கி நடக்க அவன் முன்னோக்கி நடந்தான்.

அவள் இப்படியே போனால் சரிப் படாது என்றெண்ணி ஒரு கட்டத்தில் அவனிடத்தில் நில் என்ற கை சைகையை காண்பித்தாள். தீஜே அவனது புருவங்களை சுருக்கியவாறே அடுத்த அடியை எடுத்து வைக்க தயாரானான்.

இப்போது ம்ம்ம்ம்... என்ற ஆதங்கக் குரலோடு அவள் மீண்டும் ஒருமுறை அங்கேயே நில் என்ற கை சைகையை மீண்டும் அவனிடத்தில் காண்பித்தாள். அவன் அவனது தோள்களை தூக்கி ஏன் என்று அவளை போலவே சைகையால் கேட்டான். அவள் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் பின்னோக்கி மெல்லமாய் அடி மேல் அடி வைத்து நடந்தாள்.


பத்திக்கும் தீப்பெட்டி !






.

எழுதியவர் : தீப்சந்தினி (3-Mar-14, 12:42 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 149

மேலே