விலகி போகாதே
நினைவில் வந்தாய்
நித்திரையை இழந்தேன்.
உயிரில் கலந்தாய்
உணா்வை இழந்தேன்.
சிரித்துப் பேசினாய்
சினத்தை இழந்தேன்.
தள்ளிச் சென்றாய்
தனிமையை உணா்ந்தேன்.
நாடி வந்தவன் நானடி..
நழுவிச் செல்லாதே!
தாயை இழந்து விட்டேன் ஒருமுறை!
இழக்க இதயமில்லை மறுமுறை!