நான் ரசித்த ஞாயிறு
கடல் தாயின் மடியில் கண்விழிக்கும்
காலைக்கதிரவன்..
மலைகளின் பின்னே மறைந்திருந்து
எட்டிப்பார்க்கும் மாயச்சூரியன்..!
தென்னங்கீற்றுகளின் ஊடே சிதறித்தெரியும்
சிவப்பு சூரியன்..!
தண்ணீரில் தகதகக்கும் தங்க சூரியன்..!
பசும் பயிர்களை செழிக்க வைக்கும் பகலவன்..!
கோடையில் மட்டும் அவன் சுடும்சூரியன்..!
உலகிற்கே ஒளி தரும் உன்னத சூரியன்...!
மாலையிலோ மனதை மயக்கும் மஞ்சள் சூரியன்..!
அவன் வானில் செய்யும் வர்ணஜாலம்..!
மனதை மயக்கும் மாயாஜாலம்..!
எழும் ஞாயிறின் எழில் மிகு கோலங்களை
ஒரு கவிதையில் சொல்ல முடியுமா?
எழுதுகோலில் விலங்கிட்டு வார்த்தைகளில் தான்
சிறை பிடிக்க முடியுமா?