நகைச்சுவை 078

மிக பெரிய கம்பெனி ஒன்றில் ஒருவன் வெகு நேரமாக அங்கும் இங்குமாக எந்த வித நோக்கமும் இன்றி மேலும் கீழும் பார்த்தபடி அலைந்து கொண்டிருந்தான்.

அவனை பார்த்த அந்த கம்பெனி முதலாளி அவன் அருகில் சென்று, "உனது மாத சம்பளம் எவ்வளவு என்றார்" ?

அவன், "ஐந்தாயிரம் ரூபாய்" என்றான்.

உடனே அவர் தனது பாக்கெட்டில் இருந்து 15,000 ரூபாயை எடுத்து அவனிடம் கொடுத்து “நான் இங்கே வேலை செய்ய தான் சம்பளம்
கொடுக்கிறேன். சும்மா வேடிக்கை பார்க்க அல்ல. இதில் உன்னுடைய மூன்று மாத சம்பளம் இருக்கிறது. நீ கிளம்பலாம். உனக்கு இங்கு இனி வேலை இல்லை” என்றார்.

அவனும் பணத்தை வாங்கி கொண்டு இடத்தை காலி செய்தான்.

அவன் போனதும் முதலாளி அருகில் நின்ற மானேஜரிடம் “யார் அந்த பையன். எப்போது வேலைக்கு சேர்ந்தான்” என்று கேட்டார்.

மானேஜர் மெதுவாக, “சார் அவன் கொரியர் கொண்டு வந்த பையன்” என்றார்.

நீதி: ஓவரா சீன் போட்டா இப்படி தாங்க நடக்கும் !

எழுதியவர் : (28-Feb-14, 5:03 pm)
பார்வை : 202

சிறந்த நகைச்சுவைகள்

மேலே