தொலைந்து போன உறவு
![](https://eluthu.com/images/loading.gif)
நீ கிழித்துப் போட்ட நாள்காட்டி நான்...
நீ வீசியெறிந்த வீண்தாள் நான்...
நீ அழித்துவிட்ட குறுஞ்செய்தி நான்...
நீ தூக்கியெறிந்த துன்பம் நான்...
உன் மறந்து போன நினைவு நான்..
உன் மரித்துப் போன உறவு நான்...
உன் விலகிப் போன நிழல் நான்...
உன் கடந்துப் போன காலம் நான்...
கண்ணாமூச்சி ஆடிப் பார்த்தோம்
ஒளிந்துக் கொண்டு தேட சொன்னாய்
அதிர்ந்து போய் அழுது நின்றேன்
ஆறுதல் தர ஓடி வந்தாய்
செல்லமாய் கோபித்துக் கொண்டேன்
உண்மையென நம்பி விட்டாய்
மெல்ல மெல்ல விலகிச் சென்றாய்
கண்ணீரோடு கரைந்து போனேன்...
கை நீட்டி வா என்றேன்
இனி நீ வேண்டாம்
போ என்றாய்...
உன்னையே தொடர்ந்து வந்தேன்...
திசை மறந்து தொலைந்து போனேன்...
தேடி கொடு வா என்றேன்
தொலைத்து விட்டேன்
நம் உறவை என்றாய்
நான் ரசித்து நின்ற
அதே புன்னகையோடு !!