வாக்கு

வலுவான தலைமைக்கும் வருங்கால நலனுக்கும்
நிலைசேர்க்க உங்களது வாக்கா ?
பழுதான கொள்கைக்கும் பண்பற்ற செயலுக்கும்
விழுவதுதான் உங்களது போக்கா?

பாருக்கும் பீருக்கும் பணம்நீட்டு வோருக்கும்
தருவதுதான் உங்களது வாக்கா ?
பேருக்கும் புகழுக்கும் பின்னர்வரும் விருதுக்கும்
தருமத்தை மறப்பது;உம் போக்கா?

உழைக்காமல் பதவியிலே உட்கார நினைப்போர்க்கு
விலையாகும் உங்களது வாக்கா ?
அழைக்காமல் சேவைதன்னை அளிப்போரை மதிக்காமல்
பிழைப்பதுதான் உங்களது போக்கா ?

எழுதியவர் : முல்லைச்செல்வன் (2-Mar-14, 11:31 pm)
பார்வை : 246

மேலே