என் அவமானம்
பகல் பொழுது நடக்க ஆரம்பித்தேன்...
கண்கள் இருட்ட தொடங்கின..
காரிருள் மொய்க்க தொடங்கின...
மின்மினி பூச்சியோ...?
நட்சத்திரக் கூட்டமோ?
நினைவுகளில் போதையேற்றி
நிலைகுழையச் செய்தது...
தூரத்தில் சிறுவர்கள்
துள்ளி விளையாடியிருந்த
வண்ணம் இருந்தனர்....
வண்ண நிறங்களின் சூழ்ச்சியில்
சிக்காமல் நிலை தடுமாறாமல்
சென்றுவிட்டேன்..
அது திருமண நிகழ்வு..
ஆட்டங்களுக்கும் ...சந்தோசங்களுக்கும்
அனுமதி இலவசம் போல தெரிந்தது..
அறைகளை நோட்டமிட்டேன்..
என்னை யாரும் கண்டுக்கொள்ளவில்லை
என் தேவையும் அது அல்ல...
கைப்பிடி சுவறினை பிடித்து
கையலம்பும் இடம் நோக்கி போனேன்.
கைதேர்ந்த சமையல்காரன் போலும்..
பசி மயக்கம்...
வரிசையாய் வைத்தது எல்லாம்
வஞ்சனையில்லாமல் தின்றேன்...
கேட்டுக் கேட்டு வாங்கி
கூச்சம் தவிர்த்து தின்றேன்... ஊரு
கூட்டி சோறிட்டு மகிழ்ந்த
குடும்பம்...
ஒரு வேளை உணவிற்க்கு...... ச்சீ...!
யாராவது பார்க்கும் முன்பே
போய்விட வேண்டும்.. கையலம்பி
போய்விட திரும்ப ஒரு
பெரியவர்.... கையில் பொட்டலத்துடன்..
"இரவு சாப்பிட வச்சிக்க தம்பீ.".. என்றார்.
அவமானமாய் செத்துக்கொண்டே
வாங்கினேன்.