அர்ச்சனைப் பூக்கள் 0தாரகை0

சமுதாயத்தால் எற்றுக்கொள்ளப்படாத காதலை செய்துவிட்ட துக்கத்தால் காதலை விட்டு ஒதுங்க நினைக்கும் காதலனுக்கு காதலியின் வீச்சு!
___________________________________________
அதிகாரத்தால்
உள்ளம் வென்றவன்
வள்ளுவனாக
இருக்கலாம்
அஹிம்சையால்
இம்சை தருவது
நீயின்றி யாருமில்லை.
தீவிரவாதியும்
தோற்றுப்போவான்
என் தீவிர காதலுக்கு முன்.
போதிமரப்பட்டைகள் கூட
நம் காதலுக்கு
சாட்சியம் சொல்ல ஏங்கிக் கிடக்கும்
ஆசை வார்த்தைகள்
கடல் கொள்ளாமல்
அலையாய் பொங்கி
அலையவிட்டது அடுக்குமா?
இன்று துறவனைப்போல்
வேடமிட்டு புலன்களை அடக்கி
போர்த்திப்படுப்பதுமேன்?
இறைவனை மட்டும்
துணையாக்கிக் கொண்டு
எதிர்த்து நிற்போம் எதிரிகளை.
சமுதாயப் புரட்சி என்பது
காதல் புரட்சியின்
கையிலுள்ளதை
நீ அறியாமலா?
பெற்றோரின் சம்மதம்
கிடைத்த பிறகு
மற்றோரின் பேச்சில்
மனம் செல்வதேனோ?
அவர்களின் தூற்றல்களை
அர்ச்சனைப்பூக்களாய் எண்ணி
வாழ்வை துவங்கலாம்
வா காதலா!