ஓர் எழுத்து ஒரு மொழி

நம் தாய் மொழியாகிய நற்றமிழில் மொத்தம் நாற்பத்திரண்டு ஓர் எழுத்து ஒரு மொழிகள் (ஓர் எழுத்துச் சொற்கள்) உள்ளன. அவற்றில் நான் நன்கு அறிந்தவற்றை இவண் தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விழைகிறேன். அவை பின் வருமாறு:

* ஆ - பசு

* ஐ - எண் ஐந்து

* ஓ - வியப்பு

* கா - சோலை

* பூ - மலர்

* கோ - அரசன்

* போ - செல்

* நொ - துன்பம்

* கை - உறுப்பின் பெயர்

* தை - மாதம் மற்றும் தையல் தொழில் இரண்டையும் குறிக்கும் சொல்

* பை - பெயர்ச்சொல்

* மை - அழகுப் பொருள்

* வை - இடு

* மா - பழத்தின் பெயர் மற்றும் "பெரிய"

* பா - பாடல்

* ஈ - ஒரு வகைப் பூச்சி

* தா - கொடு

* வா - வருதல்

* நா - உடல் உறுப்பு

* சீ - இழிச் சொல்

* தூ - இழிச் சொல்

* தீ - நெருப்பு

* நீ - முன்னிலைப் பெயர்ச் சொல்

* மூ - எண் மூன்று

மீதம்முள்ள சொற்களைத் தாங்கள் அறிவீராயின் தயக்கம் ஏதுமின்றி எனக்குத் தெரியப்படுத்துமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! - மாணிக்கவாசகர்

எழுதியவர் : Yaazhini குழலினி (6-Mar-14, 10:38 am)
சேர்த்தது : Yaazhini Kuzhalini
பார்வை : 2732

சிறந்த கட்டுரைகள்

மேலே