பெண் இல்லா வீடு
சுவர்கள் இருந்தும்
வடிவம் இல்லை
விளக்குகள் எரிந்தும்
வெளிச்சம் இல்லை
ஆடைகள் அறையில்
அங்கும் இங்குமாய்
அழுகேறி துணிகள்
அடுக்கடுகாய்
சமையலறை எங்கும்
சந்தை கடைபோல்
சாமான்கள் இருக்கும்
நொந்த வடைபோல்
சுவர்களில் ஒற்றடை
மிக செழிப்பாக
புழுதி நிறைந்த தரை
வழுவழுப்பாக
வாசற்படி வறண்டு
தோய்ந்து போயிருக்கும்
வருவோரை வேண்டாமென
வாய் பிளந்திருக்கும்
செடிகொடிகள் யாவும்
பூப் பூபதில்லை
எள்ளி நகும் இலைகளில்
காற்றோட்டம் இல்லை
கழிப்பறை கோலம்
கடைதெரு நாறும்
இவை அத்தனை பெருமைகள்
எனை மட்டும் சாரும்
பெண் இல்லை வீட்டை
பேய் கூட அணுகா
போற்றுவோம் பெண்மையே!
காப்போம் பெண்களை !!
நா வேதஹரி

