விடியல்கள் உனக்காகத்தான்
உன்னிரு கைகளைக்
கோர்த்துப் பார் ,
ஒன்றைப் போல்
மற்றொன்றில்லா உள்ளங்கை
ரேகைகள் கூட
ஒன்றிணைந்திருக்கும் !
சிறு சிறு
ஆற்றல்களை சேர்த்து வை ,
நீயே ஓர் உந்து
சக்தியாவாய் ,உன்
எண்ணங்கள் ஈடேற !!
பூமி ஒரு கோளம்தான்
அறிஞர்கள் சொன்னபடி !
அதோ !மிகத் தொலைவில்
தெரிகிறது ,உன் குறிக்கோள் ..
ஒரு சுற்று சுற்றிவிடு
உன் வட்டப்பாதையை ,
தன்னம்பிக்கை அச்சின்
துணைகொண்டு !
வெற்றி உன் அருகில்
வந்து நிற்கும் !!
எடுத்ததற்கெல்லாம் வருத்தப்பட்டு
வலுவிழந்து விடாதே !
சாதனைக்குப் பின்னும்
சாதிக்க நிறைய உண்டு !
பல வீழ்ச்சிகள்
நேர்வது பதட்டத்தாலே தான் !!
நீ என்னும்
நேர்கோட்டில் நடைபோடு
நேர்மறை எண்ணங்கள்
துணைகொண்டு ..
உன் மீதான மற்றவர்
எதிர்ப்பு மதிப்பிழந்து
போகும் ..
தூயவளாய் துள்ளிப் போ !
துன்பங்களைத் துடைத்தெறி!
பாராட்டுகளைத் தள்ளி வை!
நீ துரத்திய வெற்றிகள்
உன்னைத் தேடி
விரைந்து வரும் !!!