குழந்தைகள் - தொழிலாளர்கள்
கருவிலேயேஇவர்களுக்குவிதிநிர்ணயம்
'எய்ட்ஸ்'.
முளையிலேயேமுதுகில்குத்துகிறார்கள்
'இவனுக்குஒண்ணும்ஏறாது'.
வீட்டுவேலைதான்என்றுஅழைத்துச்சென்றார்கள்
அங்குசென்றபின்புதான்தெரிந்தது
அந்தவீட்டுக்காரனுக்கும் 'வேலை' செய்யவேண்டுமென்று.
எச்சில்மேசைதுடைத்தால்தான்
இவன்எதிர்காலம் (?) சுத்தமாகும்.
இவர்கள்வாழ்க்கைஅமுதசுரபிதான்
ஆனால்அன்னமிடஆதிரைகள்தான்இல்லை.
வாமனச்சமுதாயத்தின்முதல்அடியையே
தம்மில்தாங்கும்மாபலிகள்இவர்கள்.
பட்டாசுவெடிக்கபயம்பண்டிகைகளில்.
படைத்ததுஇவந்தானே...
பகைநாட்டின்மீதுபோராம்
இழுத்துச்செல்கிறார்கள்,
எந்திரங்களாய்இவர்கள்.
இமயம்ஏறஇதயம்உண்டு.
ஏறினால்தானேஇறங்கமுடியும்?
'மல்லி'யும் 'குட்டி'யும்எதற்கு?
போலியில்லாமல்நடிக்கிறார்கள்
வாழ்க்கைநாடகத்தில்இவர்கள்.