கந்தகப்பூ

நீயும்
அஞ்சுவயசிலே
அள்ளிவச்ச பழைய சோற்றை
அழுக்குச் சட்டியில்
ஆட்டிக்கொண்டு
கந்தகத்தைத் தின்று
அதன் ஆக்சைடை சுவாசித்து
அரையாயுளாய்
அல்பாயுசிலே
போகப்போகிறவன்தானே,
உனக்கெப்படித் தெரியாமல்போனது
உன்மகனும்
உன்னைப்போல்தான்
உருக்குலைந்து போவானென்று...?

எழுதியவர் : ஆன்றிலின் (6-Mar-14, 7:22 pm)
பார்வை : 71

மேலே