மலர்கள்
விண்ணில் பூத்த வானவில்லின்
வண்ணங்களை இரவல் வாங்கி
மண்ணில் பூத்த பூமிவில்கள் .......
தன் வண்ண வில்களால்
தேனெனும் அம்பு எய்து
வண்டுகளை வீழ்த்திய வீர அர்ஜுனர்கள்......
தன் கொழிக்கும் எழிலில்
பெண்மையின் மனதை கொள்ளை
கொண்ட செல்ல கயவர்கள்.......
என்றும் நிலைத்ததை உணர்ந்து
இறைவனின் திருப் பாதங்களில்
சரணடைந்த உண்மை ஊழியர்கள்.....