உள்ளம் என்பது வீடு

உள்ளம் என்பது வீடு.

உள்ளம் என்பது வீடு.
உன்னை அதிலே தேடு.
கள்ளம் களைந்து பாடு—உள்ளே
கனியும் ஒளியில் கூடு.

இல்லை என்பதும் இருக்கும்.
இருப்பதும் நீயே விளக்கும்.
தொல்லை தொலைந்தும் இனிக்கும்—உள்ளே
;தொலைந்த உன்னை துலக்கும்.

கலையின் அம்சம் கோவில்
கவரும் கலை ஈர்ப்பில்
தொலையும் பொய் ஆவல்-உள்ளே
தொடரும் மெய் தேடல்.

அலைய என்ன அவசியம்?
சிலையில் என்ன இரகசியம்?
கலையாய் உன்னை இரசியேன்---உள்ளே
நிலையாய் கோவில் வசியேன்.

வீடு என்பதும் கோவிலே தான் .
விளங்கும் தெய்வம் நீயே தான்.
சத்தியம் தானதன் ஆராதனை—உள்ளே
நித்தியம் நிலவிடும் கல்யாணம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா (8-Mar-14, 9:10 am)
Tanglish : ullam enbathu veedu
பார்வை : 467

மேலே