பெண் அடிமை அல்ல
பெண் ஏன் அடிமை?
வலிமை குறைவா?
உடலிலா?மனதிலா?
இல்ல வேலையைய்ம் அலுவலக வேலையையையும்
சமபலத்துடன் நிர்வகிக்கும் அவளா...?
மன வலிமையில் குறைந்தவள்?
எந்த இல்ல வேலைக்கு உடல் பலம்
தேவை இல்லை?
சண்டைபோட்டா அவள்
வலிமையை
நிரூபிக்கவேண்டும்?
சமாதானத்தின் சின்னம் அவள்?
கருணையின் வடிவம் அவள்!
தாய்மையே அவள்!
எந்த உறவிலும்
தாய்ப்பாசம் தருபவள்!
கல்விக்கு சரஸ்வதி
செல்வத்துக்கு லட்சுமி
வீரத்துக்கு துர்க்கை என
புராணங்கள் கூறும் சக்தியின்
மனித வடிவம் அவள்!
இனி சராசரி பெண்ணும்
தற்காப்பு கலைகளில் சிறந்து
சக பெண்களையும் காப்பாள்! தன்னை
தாக்கும் ஆயுதங்களை நீர்க்கச் செய்வாள்!
உலக மகளிர் தின எண் எட்டு என்பது என்ன?
எட்டு திக்கிலும் வெற்றிக்கொடி வைப்பாள்!
நீளம் தாண்டுவதிலும்
உயரம் தாண்டுவதிலும்
இலக்கை எட்டுவாள்!
கடலின் தரையையும்
பாய்ந்து எட்டுவாள்!
அஷ்டலக்ஷ்மியாய் துறைக்கொரு பெண்
சாதனை படைப்பாள்!
காலை ஊன்றாமலே எட்டு போட்டு
வாகன ஒட்டு உரிமை வெல்வதில்
சளைத்தவளா அவள்?
எட்டு பெண்ணே சம உரிமையை?
திட்டம் உண்டு உனது கையில்தான்!