ஒரு துளி குருதியின் நெருப்பு

முன்னை ஒருத்தி
அவிழ்த்த கூந்தலில்
விரிந்த சிவப்பு !
பின்னை ஒருத்தி
எறிந்த சிலம்பில்
படர்ந்த நெருப்பு !
நீறு பூத்து நீந்திக் கிடக்குது
உயிரின் மூலத்தில்!
ஆதி சக்தி அங்கம் தானென
அவள் அறியும் நாள் வரும் !
கொற்றவை மகிழும் குரவை
ஒலி போல் இதயம் துடிக்க
திரைகள் எறிந்து
பொங்கும் கடல் போல்
நாளம் வெடித்து
நால் திசை பரவும்
ஒரு துளி
குருதியின் நெருப்பு !

எழுதியவர் : thilakavathy (8-Mar-14, 5:06 pm)
பார்வை : 105

மேலே