பெண்ணே புதுமை செய்வாயா

அடுப்பறை மட்டும் உன் உலகல்ல
கூட்டினுள் அடங்க நீ கிளியல்ல.,
மடமைப் பெண்ணே
புதுமைப் படைத்திடு....

மதியால் வெல்ல நினைத்தவன் எல்லாம்
உன் அறிவில் வீழ்ந்து விட்டான் ,
தன் பலத்தால் வெல்லத் துடிக்கிறான்
வீழ்ந்திடாதே , இடம் தராதே....

உன் அழகை உலகுக்கு காட்டிட
நீ என்ன சிலையோ??இல்லை
உயிரில்லா சதைப் பிண்டமோ??
ஆபத்தை உடன் அழைக்கும்
ஆபாச ஆடைகள் உனக்கெதற்கோ???

சபலப் பார்வைகள் கண்டால்
சீறும் பார்வையால் சாம்பலாக்கிடு....
அடிமைப் பார்வைகள் கண்டால்
அஞ்சாமையை நீ காட்டிடு...
கேலிப் பார்வைகள் கண்டால்
வேள்வித் தீயால் சுட்டுவிடு....

காமுகனை கண்டு அஞ்சி விடாதே
காலம் பதில் சொல்லுமென ஒதுங்கிவிடாதே
காலனாக மாறிவிடு அவன்
காலத்தை நீ அழித்துவிடு...

சட்டங்கள் யாவும் பட்டங்களே
என்றும் உன் துணையில்லை.,
சட்டம் இயற்றும் கையாய்
புதுமைப் பெண்ணாய் உயிர்த்தெழு...

உலகில் மனிதனை விதைத்தவளே
மனிதம் நிலைப்பதும் உன்னாளே ,
மண்ணாய் நினைப்ப வனிடம்
வருட்சமாய் உயர்ந்து நில்...

உலகம் உரைக்கச் சொல் ,
அண்டம் அதிரச் சொல் ,
விண்ணையும் தொட்டு விட்டோம்
மண்ணையும் ஆளு கின்றோம்...

நாங்கள் அடிமைகள் அல்ல
இந் நாட்டின் விழுதுகள்
உரக்கச் சொல்
பெருமைக் கொள்
நீ ""பெண்ணென்று""...

முண்டாசுக் கவியின்
உண்மை வரிகளுக்கு
உயிர் கொடுப்பாயா????புதுமைப் பெண்ணாய்

சு.பரத்குமார்

எழுதியவர் : சு.பரத் குமார் (8-Mar-14, 4:14 pm)
சேர்த்தது : s.Bharath kumar
பார்வை : 81

மேலே