எதற்காக இந்த நாள்

இன்று உலக மகளிர் தினம்
அத்தனை கல்லூரிகளிலும்,
மகளிர் மன்றங்களிலும்
ஆடம்பர விழாக்கள்
எதற்காக பெண் என்பவள் எங்கும்
அமைதியாய், அடிமையாய்,இருக்க
சொல்லி அறிவுரை வழங்கவா?
அல்லது
அப்பிய ஒப்பனையில்
அழகை கணக்கிடவா?
அல்லது
சரித்திர மங்கையராம்
ஜான்சிராணி, இந்திரகாந்தி
போன்றோரின்
சாதனை கூறவா?
ஏன் உங்கள் கண்களுக்கு
சதை பின்பமாக பார்க்கப்பட்ட
அநிந்த்ரா, உமா மகேஸ்வரி
போன்றோரை தெரியவில்லையா?
வருடங்கள் கடந்தாலும்
விழாக்களின் விமரிசை
அதிகரித்தாலும் இன்னும்
அடங்கவில்லை
மனித மிருகங்கள் மீதிருக்கும் பயம்
விழாக்கள் அனைத்தும்
விமரிசைகாகவும்
விளம்பரத்திற்காகவும் மட்டும் தான்
விழாக்கள்களை இரவு வரை
விமரிசையாக கொண்டாடினால் என்ன?
கொண்டாட்டம் விடியும் பொழுது
திண்ணாட்டமாகி விடும் என்பதால் தான்
நன் பகலிலேயே முடித்து விட்டீர்களோ?
பெண்ணே!
விடியல் வரவில்லை என எண்ணாதே
விழிகள் இரண்டை இறுக மூடிக் கொண்டால்
இருள் தான் இருக்கும்
நீ !
விருட்சாமாக வேண்டிய விதை
வீணாகி விடாதே !
நீ
எட்டி உதைத்து
எதிர்ப்பை தெரிவித்தால் தான்
எந்த மிருகத்திற்கும்
அந்த எண்ணம் வராது
அழுது கொண்டே அடங்கி விட்டால்
அடிமையாக தான் வேண்டும்
பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இரு
பரதேசிகளின் பார்வையில் பதுங்கி இரு
புலி பதுங்குவது பயத்தால் பாயத் தான்
பாயத் தயாராய் பதுங்கி இரு...
உன் கடைக்கண் பார்வைக்காக
சில ஆண்கள் காத்திருக்கலாம்
ஆனால் உன் முழுக்கண் பார்வைக்காக
தேசமே காத்திருக்கு என்பதை மறவதே!
எதிர்கால சரித்திரம் நீ தான்
தரித்திரங்களை ஒளித்த
சரித்திரம் நீ தான்....