படைப்பாளிகளுக்கு-எழுத்துரு பேட்டி

எழுத்துரு பேட்டி

வணக்கம்

கலாமன்றத்தின் புதிய முயற்சியான எழுத்துரு பேட்டி குறித்த முன்னுரை தருகிறோம் இங்கே.
நேர்காணல் முறையில் இதனை கேள்வி பதில் பகுதியில் செய்யலாம் என்பது முதற்கட்ட சிந்தனையாக இருந்தது. அது படைப்பளிகளுக்கு ஏதும் இடைஞ்சல்களை உண்டாக்கிவிடுமோ என்பதால் வேறு கோணத்தில் இந்த முயற்சியை தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கருத்துப் பரிமாறல்கள் படைப்பாளிகளின் கவிதையாக்கப் பட முடியாத உணர்வுகளை, அனுபவங்களை, தம்முடைய எழுத்துலக குறிக்கோள்களை பற்றி பேசுவதாக அமையும் !

இதற்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஒத்துழைப்பு தர கூடிய படைப்பாளிகள் வரவேற்கப் படுகிறீர்கள் ! இந்த நேரம்...நீங்கள் ஒரு தேநீர் அருந்தும் அளவிலான நேரமாக கூட இருக்கலாம்..அல்லது தோழர்களுடன் அரட்டை அடிக்கும் இன்பகரமான பொழுதாக கூட இருக்கலாம்...

கேள்விகள் சிலவற்றை ஒரு படைப்பாக தயாரித்து வெளியிடும் பட்ச்சத்தில் சுயமாக முன்வது அந்த கேள்விகளுக்கு தங்களின் பதில்களை எழுதி கலாமன்றதிற்கு விடுகை செய்வது உங்களுக்கு வசதியாக இருக்குமா ? அல்லது வேறு ஏதேனும் வழி சொல்ல முடியுமா ?

பதில் எழுதுங்கள்..உங்களில் பலருக்கும் இதில் நாட்டம் இருப்பின் அடுத்த படைப்பில் கலாமன்றத்திடம் இருந்து "பேட்டி" வடிவிலான கேள்விகள் வரும்....நீங்கள் அதற்கு அளிக்கும் பதில்களை வைத்து,விடுகை மூலம் அடுத்த கட்ட கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு படைப்பாளியுடன் கருத்துப் பரிமாறல் முற்றுப் பெரும் பட்ச்சத்தில் குறித்த படைப்பாளியின் பெயரை தலைப்பாக கொண்டு அவருடன் நடந்த கருத்துப் பரிமாறல்கள் தனி படைப்புகளாக வெளியிடப்படும் !

இந்த முயற்சி படைப்பாளிகள் குறித்து ஒரு தெளிவான பிம்பத்தை மற்ற படைப்பாளிகளின் மத்தியில் உருவாக்குவதோடு, உற்சாகத்தையும் தரும் என்பது எமது எண்ணம் !

உங்கள் கருத்துகளை எழுதுங்கள் கீழே !

எழுதியவர் : (8-Mar-14, 5:43 pm)
பார்வை : 118

மேலே