அழுதிடும் மனிதன்

அழுது அழுதுதான்
அவள் பெற்றாள்
அழுதுகொண்டுதான்
மனிதன் பிறந்தான் !

அழுகையின் அவலத்தை
மாற்றி சிரித்திட முயன்றான் மனிதன் !
அதை வாழ்க்கை என்றான் !

அதை தொடரும் வேளையெல்லாம்
இடைவேளையாய் வந்தது அழுகையே !
மீண்டும் முயன்றான் மீண்டும் தொடர்ந்தான் !
மீண்டும் சிரித்தான் மீண்டும் அழுதான் !

முடிவில் வந்து நின்றது
முடிவில்லாத ஒரு மௌனம்
அந்த மௌனத்தின் பொருள்
மகிழ்ச்சியா அழுகையா
யார் அறிவார் ?

அழுதழுதே பிறந்தான்
மரணத்தின் மடியில்
மௌனத் துயிலில்
சிரிப்பும் அழுகையும்
மறந்தே உறங்கினான் !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-14, 7:27 pm)
Tanglish : azhuthidum manithan
பார்வை : 496

மேலே