மோக முள்

பழைய காலம்
பகிர்ந்த தாகம்
பருகிய மோகம்...

அவன்,

பார்வை பட்ட இடம்
பவளம் மின்னுதடி
பாலில் நெய்த கடலோ ...

தூக்கம் கலைந்ததை எண்ணி
துறவு நிலையடைந்து
முற்றும் துறந்தது ஏனோ ...

திரை விலகியதால்
திக்கும் பார்த்த கண்
திணறல் கொண்டது ஏனோ ...

மலைகள் கடந்த நிலா
மார்பில் மையல்
கொண்ட தேனோ ...

வான்மலை இரண்டு
தேன்மழை பொழிந்து
தேகம் நனைப்பதும் ஏனோ ...

மார்கழி பனியில்
மல்லிகை மணத்தில்
மயங்குவது நான் தானோ ...

இடை அசைவுகளில்
இடர் கூடுதடி
இறுக்கம் இன்னும் ஏனோ ...

விழியில் விழுந்த மலர்
வீழ்ச்சியடைந்ததை எண்ணி
விம்மி விம்மி அழுதோ ...

வீணை மீட்டும் விரல்
மேனகை மேனி மீட்டுதடி
காமன் செய்த கலையோ ...

மோட்சம் அடையவே
மூச்சு முட்டுதடி
வலிகள் தந்த வரமோ ...

வாட்டம் கண்ட உடல்
ஓட்டம் கண்ட உடன்
கடலில் கலந்து விடுதோ ...

அவள்,

மோக தாகம் முடிவதற்குள்
மேகம் பொழிந்ததது ஏனோ ...

இரவின் நிலவில்
இவனது பிடியில்
இன்பம் இவை தானோ ...

கண்ணனின் மடியில்
கார்த்திகை மழையில்
நனைவது சுகம் தானோ ...

பிழை திருத்த வேண்டியே
பேதை கேட்குதே
நிலா மீண்டும் மீண்டும் வருமோ ....

எழுதியவர் : தினேஷ் sparrow (9-Mar-14, 6:38 am)
Tanglish : moga mul
பார்வை : 241

மேலே