அழிந்து கொண்டிருக்கிறேன

என் விழித்திரையில் நிரந்தரமாய்
பதிந்து விட்ட
என்னவள் செல்கிறாள்...
என் குருதி ஓடையில்
அவள் தாகத்தை தணித்து..
என் கண்ணீர் துளிகளின்
நடனத்தை ரசித்து..
வார்த்தைகள் வராமல்
துடித்துக் கொண்டிருக்கும்
என் உதடுகளைத் தவிர்த்து ..
இறுதியாக,
அவள் விட்டுச் சென்ற சொற்களை
அடையாளம் காண முடியாமல்
பரிமாறிக் கொண்ட
முத்தங்களின் வாசனையுடன்
மௌனமாய்
அழிந்து கொண்டிருக்கிறேன்
நான்!!

எழுதியவர் : அச்சில் ஏறா கவிதைகள (9-Mar-14, 9:49 am)
பார்வை : 79

மேலே