நெஞ்சத்தின் ஆசைகள் என் தோழியின் கவிதை துளி
எண்ணப் படிகளில் ஏறியே.
விண்ணை தொடும் முயற்சியில்
மின்னல் தரும் உன் பார்வை
மழைதனில்நனைந்த
பின்னல் நினைவுகள் .
இன்னும் உயிர்தனில்....
சின்னக் குயில் பாடும்
தோட்டத்தில் வண்ண
மயில் வந்தே ஆடும் ...
வண்ணம் பூசிய விழிகளின்
சாடையில் ......
திண்ணம் இது என்றே
தோணுது ....முன்னம் உன்
வார்த்தையின் ஊஞ்சலில்
ஆடிய இதயம் ...இன்னம்
எழவில்லை ..தோய்ந்தே
ஆடுது இன்பததின் நாடலில்
சொன்ன வார்த்தைகள்
மறப்பது இல்லை .இதயக்
கூட்டுக்குள் புதைந்தே ஆடுது
நெஞ்சத்தின் ஆசைகள் ...