புத்தக புழு
வீடெங்கும் புத்தகங்கள்
இறைந்து கிடந்தன...
இயன்ற அளவுக்கும் அதிகமா
வாசித்ததில் அவன் ஒரு
புத்தக புழுவாக மாறி இருந்தான்...
புத்தகத்தின் ஆரம்ப கட்டத்தையும்
புத்தகத்தின் இறுதி கடடத்தையும்
வாசிப்பது அவனுக்குகான இயல்பு...
நடுவில் உள்ள பக்கங்கள்
நல்ல வேளையாக கற்பிழக்காமல்
இருந்தன...
முன்னுரைகளை அவன் வாசிப்பதே
இல்லை....
காகிதங்களை கரையான்கள் அரிக்ககூடும்..
கற்பிழந்த பக்கங்கள் தப்பிக்கும்..
முதிர்கன்னியாய்இறந்துவிட்ட
நடுபக்கங்களுக்கு ஒருநாள்
கண்ணீர் சிந்துவான்...
கற்பிழந்த தொடக்கமும், முடிவும்
ஒரு நாள் கைகொட்டி சிரிக்கும்...
அப்போது,
முன்னுரை வாசிக்கப்படலாம்
முடிவுரையாக.....

