நாளைய சமுதாயம்

"என்னத்த சொல்றது அவன் வரவர ரொம்ப மோசமா போய்கிட்டு இருக்கான் அவன யார் திருத்துரதுன்னு தெரியல " என்று பொலம்பினால் கண்ணம்மா.

அவள் சொல்வது வேறு யாரையும் அல்ல அவள் ஏக புத்திரன் அசோகனைதான்.இவ்வாறு அவள் கூறுவதற்கு காரணம் அவன் வேலை வெட்டி இல்லாதது தான்.இதைச் சொன்னால் அவன் சிறுத்தை போல் பாய்வான்.பாவம் அவள் என்ன செய்வாள் முதியவள் ,எத்தனை நாள் தான் இப்படி சமையல் வேலை செய்து இப்படி அவளால் துன்புற முடியும்.காலாகாலத்தில் அவனுக்கு ஒரு கல்யாணம் பண்ண வேண்டாமா? .இது தான் அவளை மேலும் வாட்டியது.

அசோகனைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் நல்ல கலை தெளிந்த நீரோடை போன்ற முகம் நல்ல வனப்பு ,படிப்பும் ஓரளவு இருந்தது ஆனால் வேலை தான் இல்லை. காரணம் அவனுக்கு நல்ல வேலை இன்னும் வரவில்லை என்பது அவனது நினைப்பு. அதுவும் ஓரளவு உண்மைதான்.

வரும்வேலை எல்லாம் சமையல் செய்பவரின் உதவியால் வேலை , போஸ்டர் ஓட்டும் வேலை , rickshaw ஓட்டும் வேலை அல்லது பேப்பர் போடு வேலை. இது அவனுக்கு சற்று கௌரவ குறைச்சலாக தெரிந்தது.ஆனாலும் வேறு வழி இல்லை என்பது அவனுக்கே தெரிய ஆரம்பித்துவிட்டது.அவன் கௌரவ குறைச்சல் படுவதற்கும் காரணம் இருந்தது அது அவன் கல்லூரியில் படிக்கின்ற மாணவன்.

இருந்தாலும் உலக வாழ்கையில் ஏற்ற தாழ்வு என்பது சகஜம் அல்லவே அது தன் வேலையை காட்டிவிட்டது.தனக்கு இத்தனை நாள் படிப்பிற்கு உதவி செய்து வந்த retired மிலிடரி தாத்தா மாரடைப்பால் உயிர் இழந்தார்.இருந்தாலும் அவர் இவனுக்கென்று ஒரு தொகையை வீட்டில் வைத்திருந்தார் பாவம் அது அந்த தாத்தாவின் மகன் கையில் மாட்டிவிட்டது.அவன் மிகப்பெரிய குடிகாரன்.அவன் அத்தொகையை அன்றே தீர்த்துவிட்டான் பாதி குடியில் மீதி வழியில் தவற விட்டுவிட்டான்.

இப்போது அசோகனுக்கு கடைசி பரீட்சை தேறிவிட்டால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.உதவத்தான் ஆளில்லை.
வாழ்க்கை என்ன என்பது அவனுக்கு அப்போதுதான் புரிந்தது. தன்மனதை தேற்றிஇக் கொண்டு புறப்பட்டான் அவன் தாய் சொன்ன வேலைக்கு.

பரந்த இவ்வுலகம் அவனுக்கும் வழிகாட்டாமலா போய் விடும்.

அசோகனை போன்றோருக்கு இக்கதை சமர்ப்பணம்.

எழுதியவர் : இஸ்மாயில் (14-Mar-14, 1:06 pm)
சேர்த்தது : இஸ்மாயில் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : kaaranam
பார்வை : 374

மேலே