இன்னார் செய்தாரை ஒறுத்தல்

ஒரு ஊரில குமார் என்ற இளைஞன் இருந்தான் . அவன் ஓரளவுக்கு படித்தவன் தன் படிப்புக்கு ஏற்ற வேலை அவனுக்கு கிடைக்கவில்லை என்றாலும் அவன் சும்மா இருக்க விரும்பவில்லை தான் ஏதாவது ஒரு சுய தொழில் செய்தாவது உழைக்க வேண்டும் என நினைத்தான்.

அதற்காக முதலில் ஒரு தொகைப் பணத்தை ஏற்பாடு செய்தான் அந்த பணத்தை கொண்டு கொஞ்ச ஆடைகள் எடுத்து அதை வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என எண்ணினான் . அவ்வாறே தனது தொழிலை தொடங்கினான் . அவன் நினைத்தது போலவே அவன் தொழிலும் நன்றாகவே போனது அவனுக்கும் நல்ல வருமானமும் கிடைத்தது .


இப்படி இருக்கையில் ஒரு நாள் மாலை நேரம் ஒரு ஊருக்கு ஆடைகள் விற்பதற்கு தனது சைக்கிளில்ஆடைகளை கட்டி கொண்டு சென்றான் . அங்கே சில வீடுகளுக்கு சென்று ஆடைகளை விற்று விட்டு இறுதியாக கந்தன் என்ற பணக்காரன் வீட்டுக்கு ஆடைகளை விற்பதற்காக சென்றான் .

தனது சைக்கிளை வெளியில் விட்டு விட்டு ஆடைகள் கொண்ட பெட்டியை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு முன் சென்றான் . கந்தன் மட்டும் வீட்டு விராந்தாவில் இருந்து பத்திரிகை வாசித்து கொண்டிருந்தான் அங்கே வேறு யாரும் இருக்க வில்லை .

இவன் " ஐயா நல்ல புடவைகள் இருக்கு வேணுமா " என்று கேட்டான் " சரி காட்டு பார்ப்பம் " என்றான் . இவனும் பெட்டியை அவிழ்த்து எல்லாவற்றையும் விரித்து காட்டினான் . " நல்ல தரமான புடவைகள் இவை வெளியில் கடையில் வாங்கினால் 2500 ரூப 3000 ரூபா வரும் இது வெறும் 1500 ரூபா தான் " கந்தனும் இரண்டு புடவையை எடுத்துக் கொண்டு " கொஞ்சம் இதில இரு காசு எடுத்து வாறன் " என்று சொல்லி உள்ளே போனான் .

உள்ளே புடவைகளை வைத்து விட்டு வெளிய வந்து " இந்தப்பா காசு " என்று 1500 ரூபா கொடுத்தான் . இவன் வாங்கி பார்த்து விட்டு " ஐயா ஒரு புடவை தான் 1500 ரூபா நீங்க இரண்டு புடவைகள் எடுத்தனீங்க 3000 ரூபா தரனும் இதில 1500 ரூபா தான் இருக்கு " என்றான்.

" நான் ஒரு புடவை தானே எடுத்தனான் " என்றான் இவர்களுக்கு இடையே வாக்கு வாதம் தொடர்ந்தது . கந்தன் ஒத்துக்கவே இல்லை கந்தன் பணம் நிறைய இருந்தாலும் மற்றவர்களை நன்றாக ஏமாற்றும் குணம் கொண்டவன் . தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி வருந்திக்கொண்டு பெட்டியை கட்டிக் கொண்டு திரும்பினான்.

இவன் வாசல் வரை போக வில்லை " திருடன் திருடன் பிடி பிடி " பின்னால் கத்துவது கேட்டது . திரும்பி பார்த்தான் . ஒரு திருடன் முகத்தை மூடி கட்டி கொண்டு ஓடி வந்தான் பின்னால் கந்தன் துரத்திக் கொண்டு வந்தான் . " அவனை பிடி அவனை பிடி " என்று கந்தன் கத்தினான் . இவனால் திருடனை பிடிக்க முடியும் ஆனால் இவன் பிடிக்கவில்லை திருடனை அப்படியே ஓட விட்டான்.

" அவனை பிடி பிடி என்று கத்துறன் அப்படியே நிக்கிராயே உனக்கு என்ன காது கேட்காதா " என கந்தன் பேசினான் ." நான் ஏன் அவனை பிடிக்கணும் நீ என்னை ஏமாற்றினாய் அவன் உன்னிடம் திருடினான் இரண்டும் ஒன்றுதான் " என்றான் . வீதி வரை சென்று பார்த்தான் திருடனை காணவில்லை . திருடனையும் திட்டி இவனையும் திட்டினான் கந்தன் .

என்னை ஏமாற்றினவனை கடவுள் எப்படி தண்டித்து விட்டார் என எண்ணிக்கொண்டு வெளியில் வந்தான் . அவனது சைக்கிளை காணவில்லை . அப்பத்தான் அவனுக்கு நினைவு வந்தது தான் சைக்கிளை பூட்டாமல் வந்தது . வெளியில் ஓடி வந்த திருடன் தனது சைக்கிளையும் திருடிக்கொண்டு ஓடி விட்டான் என்பதை உணர்ந்தான் .

என்னை ஏமாற்றினவன் ஏமாற்றப் படனும் என நினைத்ததற்கு எனக்கு கடவுள் தண்டித்து விட்டாரே ." இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல்" என்று திருவள்ளுவர் சொல்லி இருப்பதை படித்த தெரிந்த நான் அந்த பணக்காரனுக்கு உதவி செய்திருக்க வேண்டும் . செய்திருந்தால் எனக்கு இவ்வளவு இழப்பு வந்திருக்காதே என்று மனம் வருந்திய படி நடந்து சென்றான் குமார்

எழுதியவர் : sarvaki (14-Mar-14, 10:44 am)
பார்வை : 594

புதிய படைப்புகள்

மேலே