முதலமைச்சர் சந்தோஷ்

எழுதுகோலின் மை தெளித்து
ஆவேச நாயகன் நான்
அரசியல் நாய்களை தாக்கினேன் -அதன்
வாலை வெட்டினார்கள் வாக்காளர்கள்.

எழுத்தாளன் என் எண்ணத்திற்கு
ஏராளமான வரவேற்பு மாலைகள்
”எழுதியது போதும் எழுந்து வா! ”
எதிர்பார்த்த மக்களை ஏமாற்றவில்லை.

ஏப்ரல் முதல் நாளில் - பதவி
மேடை ஏறினேன், உறுதிமொழி எடுத்தேன்
”முதலமைச்சர் சந்தோஷ் வாழ்க”
வேஷமில்லாத வாசகர்களின் கோஷங்கள்.

”முதல்வன் “ திரைப்படம் உசுப்பேற்றியது- என்
பின் தொடரும் பாதுகாப்பு வாகனங்கள் -இனி
பெண்மணிகளை தொடரும் கயவர்களை துரத்தும்.

மதுபான கடைகளில் மது விற்பனைக்கல்ல -அங்கு
இளநீரும், நொங்கும் மானிய விலைக்கு.
இலவச பொருட்கள் ஏதும் இல்லை
உழைத்து வாழ்பவர்களுக்கு சலுகை உண்டு.

கல்வி கற்க கட்டணம் ஏதும் இல்லை
பாடதிட்டத்தில் பாலியியல் கல்வி உண்டு.
மருத்துவமனைகளை அரசு கட்டுப்படுத்தும் அர்பணிப்புள்ள மருத்துவரை அரசு தத்தெடுக்கும்.

வன்கொடுமை செயலில் ஈடுப்பட்டால்
உடனடியாக பிறப்புறுப்பு துண்டிப்பு..
எச்சில் துப்பினாலும் குப்பை போட்டாலும்
துப்புரவு வேலையோடு அபாரதமும் உண்டு.

விவசாய மேலாண்மை உருவாக்கப்படும்
விவசாயம் அறிந்தவர்களுக்கு அரசு வேலை.
திருநங்கைகள் ஆண்பால் என்று அறிவிக்கப்படும்.
பாலியியல் தொழில் முற்றிலும் ஒழிக்கப்படும்.

................................................................
................................................................
................................................................

”சார் போஸ்ட்......! ”

தபால்காரனின் குரல்
செவியில் கேட்க கண் விழித்தேன்
கனவு கலைந்து எழுந்தேன்
வார இதழ் அனுப்பிய கடிதம் .

கொடுத்தான், படித்தேன்.


--”உங்கள் படைப்பு ஏற்றுக்கொள்ள இயலாது
--அரசியல் அநாகரீகம் நிறைந்துள்ளது ”


பத்திரிக்கை ஜால்ராக்கள்- அரசியல்
பத்தினியை நாசப்படுத்தும் வல்லூறுகள்....!
ஜனநாயகத்தின் வேர்களை
செல்லரிக்கும் ஊடக கிருமிகள்

கனவு நனவாக வேண்டும் -முதலில்
குள்ளநரி கூட்டங்களை விரட்ட வேண்டும்.
இது
நாற்காலிக்கான கனவு அல்ல
நாற்றமெடுக்கும் அரசியலை
நறுமணப்படுத்தும் கனவு.


உங்களில் யார் அடுத்த முதல்வர்...?
முதலில் உங்களில் யார் நல்லவர் ?
விடை சொல்லுங்கள்
புது விடியல் காண்போம்.


----------------------------------------------------------------------------
--இரா.சந்தோஷ் குமார்
.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (14-Mar-14, 11:16 pm)
பார்வை : 407

மேலே