எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்

உதிர விடாதே ஆசையை - அது
உவகையாய் மாற்றும் வாழ்க்கையை

ஆசைப் படு அன்பை அளிக்க - பே
ராசைப் படு தீமைகள் அழிக்க...!!

ஆசைப் படு அகத்தினை உணர - பே
ராசைப் படு அடக்கத்தைப் பழக..!!

நல்லதைப் பழக பேராசை வேண்டும் - அனைவரும்
நலமாக வாழ பேராசை வேண்டும்

தன்னலம் கருதா பேராசை வேண்டும் - மனிதத்
தன்மை கெடாமல் உதவ பேராசை வேண்டும்...

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Mar-14, 7:33 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 124

மேலே