மகிழ்ச்சியான வாழ்க்கையில் மன உளைச்சல் இல்லை

மன விழிகள் திறந்திடா
மனிதர்கள் மண்ணில் சொன்னார்
மாதவனின் காலடியில்
மஹாலக்ஷ்மி - எனவே

கடவுளரும் பெண்களை
கட்டுப்படுத்தியே இருக்கின்றனர் என...

மார்பிலே இடம் கொடுத்தீர்
மாதவா நீர் எனக்கு
மனமுவந்தே தாள் பணிந்தேன்
மங்கை என் மனம் உமக்கு......

அடிமைத்தனம் என்பது வேறு
அன்பை பகிர்வது என்பது வேறு
ஆராதிப்பது என்பது வேறு
அடக்கி வைத்திருப்பது என்பது வேறு

எனவே

அரவணைப்பு என்பது சிறை அல்ல
அப்படி நீங்கள் உணர்ந்தால்......

அன்பிலே அது கொஞ்சம் அழுத்தம் ஜாஸ்தியான
அன்பு அவ்வளவுதான் - புரிந்து கொள்வோம்......

இனி

பல மடங்காய் மனம் மகிழ்ந்து வாழ்வோம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Mar-14, 8:18 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 266

மேலே