கட்டுப்பட்டுவிட்டேன்

ஆசைக்கு ஒரு பெண்
என்று என்னை
அன்பாய் வளர்த்தார்கள்

என் சிரிப்பை கண்டு
சிலிர்த்தார்கள்
என் அழுகை கண்டு
கலங்கினார்கள்
என்னை சீவி சிங்காரித்து
என் அழகை ரசித்தார்கள்

நான் வாயதுக்கு வந்ததும்
சந்தோஷத்தில் மிதந்தார்கள்

பொறுப்புகள் கூடியது

அளவுடன் சிரிக்க கற்றுக்கொண்டேன்
அளவுடன் பேச கற்றுக்கொண்டேன்
வெட்கப்பட வேண்டும்

பருவ வயது கொஞ்சம்
மோசம் தான்
கட்டுப்பாட்டுடன் வளர்ந்தேன்

திருமணம் முடிவானது

அறிமுகம் இல்லாத
ஒருவருடன் என்
மீதி வாழ்க்கையை ஒப்படைக்க
இசைந்துவிட்டேன்


என் அப்பாவிற்கு பிறகு
என்னை அதிகம் நேசிப்பவர்
என்னை எப்போதும் காதலிப்பவர்
அடிக்கடி என்னை கட்டிப்பிடிப்பவர்
இப்படி
எத்தனையோ ஆசைகளுடன்
கட்டுப்பட்டுவிட்டேன்

மனைவியாய் என் வாழ்க்கையை
ஒப்படைத்துவிட்டேன்......

எழுதியவர் : சுதாகர் ராமகிருஷ்ணன் (15-Mar-14, 11:30 am)
பார்வை : 83

மேலே