பள்ளிக்கால மழை

நண்பர்கள் கைகோர்த்த
வீதியோர நடையில்
பெய்த மழை...

தலை மறைக்க
குடையாய் தூக்கிய
ரெக்கார்ட் நோட்டு...

இன்று மை கரைந்தும்...

மழையில் நனைந்து
கரைபடிந்து கலராய்
மாறிய ஆடையும்...

அன்று நனைந்த
மழைக்கு சாட்சியாக
இன்றும்...

நினைவில்........

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (15-Mar-14, 6:09 pm)
பார்வை : 672

மேலே