உனக்காக காத்திருப்பேன்
காற்றின் முகவரியை தேடிய எனக்கு
காதல் முகவரி தந்தவளே
உன் நினைவு என்னும் தண்டனையால்
காதல் சிறையில் சிக்கி தவிக்கிறேன்
ஒருமுறை உன்னை பார்த்திட
மெழுகாய் உருகி தவிக்கிறேன்
இருவரும் அருகில் இருக்கையில்
காதல் நம் இடையில் இல்லை
காதல் நம் இடையில் இருக்கையில்
நீயும் என் அருகில் இல்லை
உன்னோடு பேச நினைப்பதை எல்லாம்
நிலவோடு தினம் பேசுகிறேன் .............1
நிலவும் என் நிலையை கண்டு
ஒவ்வொரு நாளும் தேய்கிறது .............!
புயலாய் வீசிடும் காற்றும்
என்னை தீண்டி தென்றாலாய் மாறி போகிறது
என் விழிகளில்
இன்றும் உறக்கமில்லை .....................!
இரவு என்பதும்
என் விழியில் இல்லை...................!
காலம் நம்மை சேர்க்காவிட்டாலும்
காலம் கடந்து காத்திருப்பேன்
உன் காதலுக்காக..........!

