சுயம் தொலைத்த சுயம்புகள்

சுயம் தொலைத்த சுயம்புகள்

ஓடிக் கொண்டேயிருகிறோம்
நொடி முள்ளை விட வேகமாய்

படிக்கும் போது தெரியவில்லை
வீணாக்கிய நேரங்கள்
பின்னால் கிட்டாதென்று

இயந்திர வாழ்க்கையில
எண்ணெய் உற்ற
நேரமில்லை

கொட்டும் மழை
சிரிக்கும் குழந்தை
அந்திவானம்
முன்றாம் பிறை
பிடித்த கவிதை
கனவாகி போனது
பொய்யான புன்னகை
முகமாகி போனது

கணிணியே கண்ணானது
காண்பதெல்லாம்
பொய்யானது

பிறருக்காய் வருந்த
நேரமில்லை
சந்தோச சிரிப்புகள்
கேளாமலே போயின

உறங்க மட்டும்
வீடானது
உறவுகள்
போனானது

எல்லை தாண்டும்
எகலைவன்களுக்கு
குருதட்சணை
வாழ்க்கையானது ....

பாண்டிய இளவல்( மது. க)

எழுதியவர் : பாண்டிய இளவல்( மது. க) (16-Mar-14, 9:02 am)
பார்வை : 158

மேலே