G. Madhu - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  G. Madhu
இடம்:  madurai
பிறந்த தேதி :  06-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-May-2011
பார்த்தவர்கள்:  288
புள்ளி:  123

என்னைப் பற்றி...

இலக்கணம் இன்றி எழுதுகிறேன் என் மனதில் தோன்றியதை கண்ணால் கண்டதை எழுதுகிறேன் பிழை இருப்பின் பொருத்தருள்க

என் படைப்புகள்
G. Madhu செய்திகள்
G. Madhu - G. Madhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Feb-2016 3:43 pm

தாயும் சேயும்

மருத்துவ கூடம்
தண்ணீர்குடம் நிறைவாய்
இல்லை - கொஞ்சம்
நடக்க சொல்லுங்கள்
இயற்கையாய் வலிக்கட்டும்
என்றபடி படி சென்றிட

கவலையுடன் அவளும்
கவலை காட்டாது அவனும்
தாங்கி நடந்திட
ஆயிரம் எண்ணம்
இருவர் மனதிலும்

மீண்டும்
பரிசோதித்த மருத்துவர்
கத்தியின்றி வழியில்லை
வலியின்றி வந்திடுவாள்
வாக்குகள் தந்திட
தனியே நடை
பயின்றான் வராந்தா முழுவது

மின்னிய சிவப்பு விளக்கு மங்கிட
பிரகாசித்த பச்சை விளக்கு
கதவுகள் திறக்க
காத்திருந்த காலம்
கோடான கோடி தெய்வங்களை
மனதில் பிரார்த்திக்க

கதவினை திறந்து
மகிழ்ச்சியுடன்
மருந்துவர் கூறிய வார்த்தை
தாயும் சேயு

மேலும்

நன்றி தோழரே 23-Feb-2016 10:31 am
தாயின் அன்புக்கு உலகில் எதுவும் நிகரில்லை உயிரை கொடுத்து உயிரை ஆக்கும் தெய்வம் தாய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2016 5:29 pm
G. Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2016 3:43 pm

தாயும் சேயும்

மருத்துவ கூடம்
தண்ணீர்குடம் நிறைவாய்
இல்லை - கொஞ்சம்
நடக்க சொல்லுங்கள்
இயற்கையாய் வலிக்கட்டும்
என்றபடி படி சென்றிட

கவலையுடன் அவளும்
கவலை காட்டாது அவனும்
தாங்கி நடந்திட
ஆயிரம் எண்ணம்
இருவர் மனதிலும்

மீண்டும்
பரிசோதித்த மருத்துவர்
கத்தியின்றி வழியில்லை
வலியின்றி வந்திடுவாள்
வாக்குகள் தந்திட
தனியே நடை
பயின்றான் வராந்தா முழுவது

மின்னிய சிவப்பு விளக்கு மங்கிட
பிரகாசித்த பச்சை விளக்கு
கதவுகள் திறக்க
காத்திருந்த காலம்
கோடான கோடி தெய்வங்களை
மனதில் பிரார்த்திக்க

கதவினை திறந்து
மகிழ்ச்சியுடன்
மருந்துவர் கூறிய வார்த்தை
தாயும் சேயு

மேலும்

நன்றி தோழரே 23-Feb-2016 10:31 am
தாயின் அன்புக்கு உலகில் எதுவும் நிகரில்லை உயிரை கொடுத்து உயிரை ஆக்கும் தெய்வம் தாய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2016 5:29 pm
G. Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Nov-2015 4:14 pm

பச்சையாடை தேவதைகள்

காலம் : 2200
இடம் : செவ்வாய் கிரகம்

ஆராய்ச்சி கூடத்தில்
ஆர்பாரித்து கொண்டனர்
நெல் ஒன்று புதிதாய்
முளைத்தற்க்காக

பூமியின் ஆராய்ச்சியில்
அவர்களுக்கு கிடைக்கலாம்
படிமமாய் ஏர் கலப்பைகள்

அவர்களின் மூதாதையர்கள்
தண்ணீருக்கான யுத்ததில்
அணுகுண்டு பரிமாற்றத்தில்
அழிந்து போயிருப்பாரென
தொல்லியல் துறை
முடிவு அறிவிக்கும்

சுவாச உருளை
முதுகில் சுமந்திட
நடந்து பழகினர்
மக்கள் புதிய கிரகத்தில்

மாத்திரைகள்
உணவாகவும்
தாகம் தடுத்திட
தடுப்பூசிகள் போடபடுகின்றன
அறிவியல் அரசாங்கத்தால்

இவர்கள்
குழந்தைகளின் கதையில்
மரங்கள் தேவதையாக்கபடலாம்

தே

மேலும்

மிக மிக சிறப்பான கவிதை தீர்க்க தர்சமான படைப்பு 04-Nov-2015 5:17 pm
G. Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 6:21 pm

நல்லார் சிலர் பொருட்டு...

வழி கேட்கும்
குருட்டு கிழவி
கைபிடித்து சிறுவன்

எங்கோ கேட்கும்
ஆம்புலன்சு சத்தம்
கண்முடி பிரார்த்திக்கும்
பூக்கார அக்கா

யாருக்கோ உதிரம்
இரவிலும் ஓடும்
கமல் அண்ணன்

பிச்சை கேட்ட பெரியவரின்
வயிற்றை நிறைக்கும்
இட்லிகார அம்மா

கேலி செய்தவனை
தட்டிக் கேட்கும்
யாரோ ஒருவளின் தகப்பன்

இன்றும் இலவசமாய்
பிரசவத்திற்க்கு
வண்டி ஒட்டும் ஆட்டோகாரர்

சபரிமலை பாதயாத்திரை
பள்ளிவாசலில்
தண்ணீர் பந்தல்

என் மீதும் பெய்கிறது
சில மழைத்துளி
நல்லார் சிலர் பொருட்டு...

பாண்டியஇளவல் மது. க

மேலும்

அருமை... R 02-Nov-2015 9:11 pm
G. Madhu - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Oct-2015 6:17 pm

கடன் தள்ளுபடி

விதைத்தவன் பசித்திருக்க
இடைதரகனின் பெரும் ஏப்பம்
காட்டினினை திருத்தி
மேடு பள்ளம்
சமனிட்டு
விதைத்தவன்
விதைக்க
முளைக்கும் முன்னே
கழுத்தை நெறிக்கும்
வங்கி கடன்
ஒற்றை சொல்
உள்ளம் தங்காது
உத்திரத்து கட்டையில்
உயிர் போக
வாரா கடன்
தள்ளுபடி
பட்டினத்து பெருமுதலாளிக்கு...

பாண்டிய இளவல் (மது. க)

மேலும்

உண்மை உண்மை...இப்போதைய விவசாயிகளின் நிலை இதுவே....அருமையான படைப்பு ... 31-Oct-2015 10:02 am
உண்மை உண்மை உண்மை . இதுவே இன்றைய ஏழை விவசாயியின் நிலை 31-Oct-2015 8:42 am
G. Madhu - G. Madhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2015 9:57 am

அவள்
அழைத்து சென்றாள்
அவள்
வாழும் உலகிற்கு

பூக்கள்
நீல நிறத்தில்
இலைகளோ
பல வண்ணத்தில்

மீன்கள் பறந்தன
பூனைகள் நீந்தின
மரத்தில்
யானைகள் இளைப்பாற
கிளி காவலுக்கு
நின்றது அவள் வீட்டில்

பொம்மைகள்
படிக்க அமர்ந்திருந்தன
பிரம்பில்லா மேசைமுன்

அவள்
மருந்தகதில்
ஊசிகள்
விற்பனை இல்லை

மனிதர்கள்
இல்லையே என்றேன்
அதற்க்கு தான்
உன்னை கூட்டிவந்தேன்
என்றால் சிரித்தபடி

தினமொரு
உலகு படைக்கிறாயே
நிரந்தர உலகு இல்லையா
கேட்டேன் நான்

நேத்தைக்கு நீ வா
செஞ்சு வைக்கிறேன்
சொன்னாள்
காலத்தை மாற்றியபடி

என்னுள்
ஒரு உலகம்
அவளுகென்று உருவானது

பாண்டிய இளவல் (மது.

மேலும்

நன்றி தங்கள் கருத்திற்கு 24-Jun-2015 12:41 am
அருமை ... இறுதிவரை உன்னிப்பாக கவனிக்கவைத்து உமது கற்பனை !. வாழ்த்துக்கள் 23-Jun-2015 11:27 pm
நண்பரே!! வாவ் அழகான கவிதை அற்புதம் வரிகள் என்னை தாக்கியது ஒவ்வொரு வரிகளும் ரசனைமிகு வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2015 11:23 pm
அடடா மிக அருமை தோழரே... எப்படி இந்த கவிதை பலரின் பார்வையில் படாமல் போய் விட்டது... வித்தியாசமான பார்வை தோழரே... மிக மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... அதற்க்கு = அதற்கு ? 23-Jun-2015 11:20 pm
G. Madhu - G. Madhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jan-2015 12:11 pm

வான வெளி திரிந்த இறைவன்
வீதி வழி வந்தான்
கரும்படிந்த புகையில்
அவன் ஒளிவட்டம் நிறமிழந்தது
குடித்திட்ட நீரில்
அவன் குரல் மாறி போனது
உரங்கள் கலந்த உணவால்
அவன் உடல் மாறி போனது
வாகனம் கொட்டிய இரைச்சல்
காதுகள் செவிடாய் போனது
குழம்பிய இறைவன்
வானமே போதுமென்று
வந்த வழி திரும்பிவிட்டான்

பாண்டிய இளவல் மது. க

மேலும்

நன்றி தோழரே 11-Jan-2015 10:22 am
உங்கள் அன்பிற்கு நன்றி 11-Jan-2015 10:22 am
இன்றைய இயற்கையின் கதறல் ! இறைவனின் இயலாமை பதறல் ! இனியில்லை இன்பமெனும் குரல் ! இதை தந்த கைவிரலுக்கு தரவேண்டும் முத்து பரல் ! அருமை !அருமை ! 11-Jan-2015 1:56 am
நல்லதொரு படைப்பு தோழரே... வாழ்த்துக்கள்... 11-Jan-2015 1:38 am
G. Madhu - G. Madhu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2014 7:31 pm

மரத்தின் மரணவாக்குமுலம்

மரங்களின்
பிணகுவியல் இடையே
கதறிக் கொண்டிருந்தது
வெட்டப் படும் மரம்

என்னவென்றேன்
துரோகிகளிடம் - நான்
பேசுவதில்லை என்றது

யார் செய்தார்
துரோகம்
சீறினேன் கோபமாய் ....

மனிதர்கள் என்றது
குறையா சீற்றத்துடன்

நீ
சுவாசிக்கும் வளி
என் வழி

உன் உணவு
என் எச்சம்

என்னை வெட்டி
உன்
இருப்பிடம் செய்தாய்

மறுப்பாயா நீ
மறுப்பில்லை என்னிடம்

வார்த்தைகளை
வரிசைப் படுத்தி
வாசிக்க தொடங்கியது குற்றப் பத்திரம்

இயற்கையின்
இயக்கத்தில்
இடையுறு நீ

இயற்கை
கட்டிய கண்ணியின்
இதயம் கிழித்தவன்

மரங்களை
வெட்டிவிட்டு - உலகை
மாசாணம் ஆக்கிவிட்டாய்

உனக்கு

மேலும்

நன்றி நட்பே 04-Dec-2014 1:45 pm
நன்றி தோழியே 04-Dec-2014 1:45 pm
நன்றி தங்கள் கருத்திற்க்கு .. 04-Dec-2014 1:45 pm
ஒவ்வொரு வரியிலும் மரத்தின் அழுத்தம் அருமை நட்பே...! 04-Dec-2014 10:10 am
G. Madhu - G. Madhu அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2014 10:46 pm

தேவதையின் கதை

கள்ளிப் பாலுக்கு
இவள் தப்பியதால்
தொட்டிலில் இடம் கிடைத்தது

பள்ளி படிக்க சென்ற
இவளுக்கு
உடல் சீண்டும்
ஆசிரியர் தொல்லையில்லை

காதலிக்கவில்லை என்று
இவள்மீது
கயவன் எவனும்
திராவகம் வீசவில்லை

இணைய தளங்களும்
இவளை
இம்சிக்க வில்லை

மாடுபிடி பேரமாய்
இவள்
மணவாழ்வு மாறவில்லை

மலடி பட்டதை
இவளும்
இதுவரை கேட்டதுதில்லை

மதிக்காத குழந்தைகள்
இவள்
வயிற்றில் பிறக்கவில்லை

முதுமையிலும்
இவள்
முதியோர் இல்லம் பார்க்கவில்லை

இவள் போல்
தேவதையாய்
வாழ்ந்திட யார்க்கு தான்
ஆசையில்லை ....

பாண்டிய இளவல் (மது. க )

மேலும்

நல்ல கவிதை 14-Jan-2015 9:18 am
நன்றி தோழமை 04-Nov-2014 11:49 am
அழகு அருமை ---- யாழ்மொழி 04-Nov-2014 11:09 am
வாழ்த்திய நல்ல உள்ளங்கள் அனைவர்க்கும் நன்றி 04-Nov-2014 11:03 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (28)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
kalkish

kalkish

சேலம்,தமிழ்நாடு
சீனிவாசன்

சீனிவாசன்

சென்னை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (28)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

அழகுபாண்டிஅரசப்பன் முத்துலாபுரம்

முத்துலாபுரம் தேனிமாவட்
Santha kumar

Santha kumar

சேலம்

இவரை பின்தொடர்பவர்கள் (28)

கா இளையராஜா

கா இளையராஜா

பரமக்குடி
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆருத்ரன்

ஆருத்ரன்

பஹ்ரைன் தீவு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே