வீடு திரும்பிய கடவுள்

வான வெளி திரிந்த இறைவன்
வீதி வழி வந்தான்
கரும்படிந்த புகையில்
அவன் ஒளிவட்டம் நிறமிழந்தது
குடித்திட்ட நீரில்
அவன் குரல் மாறி போனது
உரங்கள் கலந்த உணவால்
அவன் உடல் மாறி போனது
வாகனம் கொட்டிய இரைச்சல்
காதுகள் செவிடாய் போனது
குழம்பிய இறைவன்
வானமே போதுமென்று
வந்த வழி திரும்பிவிட்டான்
பாண்டிய இளவல் மது. க