நல்லதை மட்டுமே சிந்திப்போம்

புல்வெளி நுனியில் பூக்கின்ற
பனித்துளி அழகிய கவி வரி.....அதை
ரசிக்கும் மனமே கதிரொளி...
அள்ளிப் பருகியே ருசிக்குமே.....!!
படிப்பது என்பது ஒரு வரம் - அழகை
ரசிப்பது என்பதும் ஒரு வரம்
சிரிப்பது என்பதும் ஒரு வரம் - நல்லதை மட்டுமே
சிந்திப்பது என்பதும் ஒரு வரம்