நேற்று இரவு உணர்ந்தது

இன்றுதான் பிறந்தேன்
நான் பாலகன் இல்லை ;
பகலவன்

நேற்று இரவு 7.00 மணிக்கு பின்னர் சற்று ஓய்வு
தேவைப்பட்டது எனக்கு .
உறங்க அல்ல ; உணர

உணர்ந்தேன்
எனக்குள் ஒரு மிருகம் இருக்கக்கண்டேன்

அது
சிலவேளை சிங்கமாகவும்
சிலவேளை அசிங்கமாகவும்
இருப்பது கண்டேன்

அன்புகொள்ள தகுந்தவன் அல்லாஹ் ;
தேடிவரும் அன்புதான் அன்பு ; மற்றதெல்லாம்
வீண் வம்பு எனக்கண்டேன்

வெறும் வார்த்தைகள் மனிதனன்று ;
வர்ணச் செயல்களால் உருவாகிறான் மனிதன்

நன்றி
இதுவரை அன்பு காட்டிய அருமை தோழர்களே
நன்றி

பண்பு காட்டிய பகைவர்களே
கோடி புண்ணியம்

என்னை நான் அறிந்தேன் என்பது
இனி உணரப்படும்

எழுதியவர் : அஸ்லம் அஹமட் (11-Jan-15, 8:03 am)
சேர்த்தது : அஹ்மத் ஸைலானி
பார்வை : 73

மேலே