அவள் உலகில் நான்
அவள்
அழைத்து சென்றாள்
அவள்
வாழும் உலகிற்கு
பூக்கள்
நீல நிறத்தில்
இலைகளோ
பல வண்ணத்தில்
மீன்கள் பறந்தன
பூனைகள் நீந்தின
மரத்தில்
யானைகள் இளைப்பாற
கிளி காவலுக்கு
நின்றது அவள் வீட்டில்
பொம்மைகள்
படிக்க அமர்ந்திருந்தன
பிரம்பில்லா மேசைமுன்
அவள்
மருந்தகதில்
ஊசிகள்
விற்பனை இல்லை
மனிதர்கள்
இல்லையே என்றேன்
அதற்க்கு தான்
உன்னை கூட்டிவந்தேன்
என்றால் சிரித்தபடி
தினமொரு
உலகு படைக்கிறாயே
நிரந்தர உலகு இல்லையா
கேட்டேன் நான்
நேத்தைக்கு நீ வா
செஞ்சு வைக்கிறேன்
சொன்னாள்
காலத்தை மாற்றியபடி
என்னுள்
ஒரு உலகம்
அவளுகென்று உருவானது
பாண்டிய இளவல் (மது. க)