மனசில் வீசும் இனிய தென்றல் - 12303

பரந்த புல் வெளியில் கட்டிய
வேலிக்குள் நடப்பது என்பது....

பைந்தமிழ் கடற்கரையில் கவிப்
பாட்டு நடை பழகுவதைப் போன்றது

இலக்கணத்துக்குள் நடை பழக
இனிய தமிழ் வற்றாதிருக்கும்

இதயம் திறந்து தமிழ் ரசிப்போம்
இனிய தென்றல் மனசில் வீசும்....!!

எழுதியவர் : ஹரி (22-Jun-15, 6:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 120

மேலே