தாயும் சேயும்

தாயும் சேயும்
மருத்துவ கூடம்
தண்ணீர்குடம் நிறைவாய்
இல்லை - கொஞ்சம்
நடக்க சொல்லுங்கள்
இயற்கையாய் வலிக்கட்டும்
என்றபடி படி சென்றிட
கவலையுடன் அவளும்
கவலை காட்டாது அவனும்
தாங்கி நடந்திட
ஆயிரம் எண்ணம்
இருவர் மனதிலும்
மீண்டும்
பரிசோதித்த மருத்துவர்
கத்தியின்றி வழியில்லை
வலியின்றி வந்திடுவாள்
வாக்குகள் தந்திட
தனியே நடை
பயின்றான் வராந்தா முழுவது
மின்னிய சிவப்பு விளக்கு மங்கிட
பிரகாசித்த பச்சை விளக்கு
கதவுகள் திறக்க
காத்திருந்த காலம்
கோடான கோடி தெய்வங்களை
மனதில் பிரார்த்திக்க
கதவினை திறந்து
மகிழ்ச்சியுடன்
மருந்துவர் கூறிய வார்த்தை
தாயும் சேயும் நலம்
அவள் இறக்கிவிட்டாள்
இவன் எற்றிகொண்டான் ....
பாண்டிய இளவல்