பச்சையாடை தேவதைகள்
பச்சையாடை தேவதைகள்
காலம் : 2200
இடம் : செவ்வாய் கிரகம்
ஆராய்ச்சி கூடத்தில்
ஆர்பாரித்து கொண்டனர்
நெல் ஒன்று புதிதாய்
முளைத்தற்க்காக
பூமியின் ஆராய்ச்சியில்
அவர்களுக்கு கிடைக்கலாம்
படிமமாய் ஏர் கலப்பைகள்
அவர்களின் மூதாதையர்கள்
தண்ணீருக்கான யுத்ததில்
அணுகுண்டு பரிமாற்றத்தில்
அழிந்து போயிருப்பாரென
தொல்லியல் துறை
முடிவு அறிவிக்கும்
சுவாச உருளை
முதுகில் சுமந்திட
நடந்து பழகினர்
மக்கள் புதிய கிரகத்தில்
மாத்திரைகள்
உணவாகவும்
தாகம் தடுத்திட
தடுப்பூசிகள் போடபடுகின்றன
அறிவியல் அரசாங்கத்தால்
இவர்கள்
குழந்தைகளின் கதையில்
மரங்கள் தேவதையாக்கபடலாம்
தேவதையின் வரம்
உணவும்
காற்றும் ....
இனி
குழந்தைகள்
கனவில்
இறக்கை முளைத்த
மரங்கள் பறக்கலாம்
பச்சையாடை உடுத்தி......
பாண்டிய இளவல் (மது. க)