மரத்தின் மரணவாக்குமுலம்
மரத்தின் மரணவாக்குமுலம்
மரங்களின்
பிணகுவியல் இடையே
கதறிக் கொண்டிருந்தது
வெட்டப் படும் மரம்
என்னவென்றேன்
துரோகிகளிடம் - நான்
பேசுவதில்லை என்றது
யார் செய்தார்
துரோகம்
சீறினேன் கோபமாய் ....
மனிதர்கள் என்றது
குறையா சீற்றத்துடன்
நீ
சுவாசிக்கும் வளி
என் வழி
உன் உணவு
என் எச்சம்
என்னை வெட்டி
உன்
இருப்பிடம் செய்தாய்
மறுப்பாயா நீ
மறுப்பில்லை என்னிடம்
வார்த்தைகளை
வரிசைப் படுத்தி
வாசிக்க தொடங்கியது குற்றப் பத்திரம்
இயற்கையின்
இயக்கத்தில்
இடையுறு நீ
இயற்கை
கட்டிய கண்ணியின்
இதயம் கிழித்தவன்
மரங்களை
வெட்டிவிட்டு - உலகை
மாசாணம் ஆக்கிவிட்டாய்
உனக்கு தெரியவில்லையா ?
உன் செயலின் பிரதிபலனை
எங்களை
வெட்டி தீர்த்தபின்
யாரிடம் யாசிப்பாய்
மழைதுளிகளை!!!
இனி
உன் முதுகை
சுவாச உருளைகள்
அலங்கரிக்கும்
வெட்டிய மரத்துண்டில்
உனக்கான
தீப்பந்ததை செய்கிறாய்
நீ விட்டு செல்வது
உன் சந்ததிக்கு
சுடுக்காட்டை தானே...
வாயடைத்து போனேன்
வார்த்தை. வரவில்லை
என்னை
வெட்டுவதை மறந்து விடு
உன் பிள்ளைகளும்
மரம் வளர்க்க பழக்கவிடு
சொல்லியபடி
மண்ணில் சரிந்தது மரம்
கண்ணீருடன்
விதையை விதைத்தபடி
நடக்கத் தொடங்கினேன்
பாண்டிய இளவல்