கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

விதைத்தவன் பசித்திருக்க
இடைதரகனின் பெரும் ஏப்பம்
காட்டினினை திருத்தி
மேடு பள்ளம்
சமனிட்டு
விதைத்தவன்
விதைக்க
முளைக்கும் முன்னே
கழுத்தை நெறிக்கும்
வங்கி கடன்
ஒற்றை சொல்
உள்ளம் தங்காது
உத்திரத்து கட்டையில்
உயிர் போக
வாரா கடன்
தள்ளுபடி
பட்டினத்து பெருமுதலாளிக்கு...

பாண்டிய இளவல் (மது. க)

எழுதியவர் : பாண்டிய இளவல் (மது. க) (30-Oct-15, 6:17 pm)
Tanglish : kadan thallubadi
பார்வை : 129

மேலே