பிரியம்
உன் முகம் எனக்கு பிரியம்
உன் அகம் எனக்கு பிரியம்
உன் அருகில் நான் எனக்கு பிரியம்
உன்னுடன் அரங்கில் நான் எனக்கு பிரியம்
உன் பேச்சுத் தமிழ் கேட்க எனக்கு பிரியம்
உன் எழுத்துத் தமிழ் பார்க்க எனக்கு பிரியம்
உன் சிரிப்பை ரசிக்க எனக்கு பிரியம்
உன் சிறப்பை பிரசுரிக்க எனக்கு பிரியம்
உன் பிரியத்தில் எனக்கு பிரியம்
உனை பிரியாமலிருப்பதில் எனக்கு பிரியம்
உன் முடியில் எனக்கு பிரியம்
உன் கடியில்(ஜோக்) எனக்கு பிரியம்
உன் குறும்புசதியில் எனக்கு பிரியம்
உன் குறுஞ்செய்தியில் எனக்கு பிரியம்
உன் நடையில் எனக்கு பிரியம்
உன் நடத்தையில் எனக்கு பிரியம்
உன் வெட்கத்தில் எனக்கு பிரியம்
உன் வெசனத்தில் எனக்கு பிரியம்
உன் அன்பில் எனக்கு பிரியம்
உன் அக்கறையில் எனக்கு பிரியம்
உன் எழுத்தில் எனக்கு பிரியம்
உனை எழுத வைத்தலில் எனக்கு பிரியம்
உன் பாடலில் எனக்கு பிரியம்
உனை பாட வைத்தலில் எனக்கு பிரியம்
உன் தேடலில் எனக்கு பிரியம்
உன் நாடலில் எனக்கு பிரியம்
உன் ஒரு ஹாய்'ல் எனக்கு (கொள்ளை) பிரியம்
நீ சொல்லாத பாய்'ல் எனக்கு பிரியம்
உன் சுடி நூல் ராக்கியில் எனக்கு பிரியம்
அது செய்து முடிக்கும் வரை எனை நினைத்தலில் எனக்கு பிரியம்
உன் அறிவுரையில் எனக்கு பிரியம்
உன் தெளிவுரையில் எனக்கு பிரியம்
உன் பரிவுரையில் எனக்கு பிரியம்
உன் பிரிவுரையில் எனக்கு பிரியம்
நாம் பிரியும் தருணம் உன் பாசம் புரியும்
வருணம் நீ நடந்துக்கொண்டதில் எனக்கு பிரியம்
அடிப்பாவி,
இவ்வளவா உன்னிடம்
நான் கேட்டேன் ?
எனைப் பார்க்கும் போதெல்லாம்
' ஒரு புன்னகை
ஒரு கையசைப்பு
உன் தோழி நானென்ற
ஓர் அங்கீகாரம்
ஏதுவுமில்லையெனில்
ஒரு திட்டாவது கூட'
அவ்வளவுதான்
நான் கேட்டதை நீ தந்தது இல்லை
ஒருவேளை தந்திருந்தால்
இன்று நான் உன்னை மறந்திருப்பேன்
.
.
.
.
இவையனைத்துமே ,
உன்னை என் முன் நிறுத்தி
என்னுள் உன் நிலை உயர்த்தி
நியாபக தளிர்களை நனைத்து
தாமரைப்பூ உனை நினைத்து
நித்தம் ஒரு புன்னகையும் சில
திட்டுகளும் உனக்காய் உதிர்த்து
உன் மேல் பிரியமான பிரியம் கொள்ளச் செய்கிறது
இறுதியாக,
உன் பாசத்தில் எனக்கு பிரியம்
அதை மறைத்து இன்று
நீ போடும் வேசத்தில் எனக்கு பிரியம்
உன் சொல்படி
மறு ஜென்மத்திலும்
நம் பிரியம் அழிவதில்லை !
பிரியத்துடன் பிரியமான மணி! தமிழ்மணி!
ஒரு நாடோடி சகோதர தோழனின் நினைவுத்துளிகள் !